நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா, தம்பி ராமையா மகன் உமாபதியை காதல் திருமணம் செய்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திரைப்பட நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, என் நண்பர் தம்பி ராமையாவிடம் நான் போனில் பேசினேன். அவரது மருமகள் ஐஸ்வர்யாவுக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளது. மது அருந்தினால் தான் தூக்கமே வரும் என்ற நிலையில் அவர் இருந்ததால் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றுள்ளது. இதில் ஐஸ்வர்யா தன்னிச்சையாக தனது தந்தை நடிகர் அர்ஜூனை வீட்டுக்கு அழைத்ததால் பிரச்சனை இன்னும் பெரிதாகி விட்டது. இதனால் ஏற்பட்ட ஈகோ காரணமாக ஐஸ்வர்யா அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். ஈகோவால் பிரிந்துள்ள இந்த ஜோடி மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் அதில் கூறியிருக்கிறார்





