நடிகர் விஜய் இப்போது நடித்துள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்). இந்த படத்தின் டைரக்டர் வெங்கட் பிரபு. இவர் பல வெற்றி படங்களை தந்தவர். அந்த வரிசையில் சென்னை 28, மங்காத்தா, மாநாடு, கோவா, சரோஜா போன்ற பல படங்களை தந்தவர். அதனால் விஜய் நடித்த கோட் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜீத்குமாரை வைத்து, மங்காத்தா என்று மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர் வெங்கட் பிரபு. தளபதி விஜயை எந்த மாதிரி இந்த படத்தில் காட்டப்போகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருப்பது ரசிகர்களுக்கு இன்னும் பெரிய விருந்தாக இருக்க வாய்ப்புள்ளது.
மங்காத்தா படத்துக்கு பிறகு, விஜய் மற்றும் அஜித் குமார் இருவரையும் வைத்து படம் எடுக்க வெங்கட் பிரபு மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் மங்காத்தா படத்தில் தன்னுடைய கேரக்டரை, ஒரு கட்டத்தில் வெங்கட்பிரபு டம்மியாக்கி விட்டார் என்ற கோபத்தில் வெங்கட் பிரபு படத்தில் மீண்டும் நடிக்க, அஜீத்குமார் சம்மதிக்கவே இல்லை. அதனால் கடைசி வரை இது நடக்கவே இல்லை.
ஆனால் கோட் படத்தில் விஜய் அப்பா – மகன் என்ற இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். அதில் ஒருவரை டீ ஏஜிங் செய்து 20 வயது விஜயாக காட்டப் போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு பெரிய உற்சாகமான படமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, சுதீப், கஞ்சா கருப்பு, நாயகிகளாக சினேகா, மீனாட்சி சவுத்ரி, கனிகா, ரம்யா கிருஷ்ணன், லைலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா அந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு, விசில் போடு என்ற பாடல் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியானது
கோட் படப்பிடிப்புமுடிவடைந்துள்ள நிலையில், படத்துக்கான வியாபாரம் துவங்கி இருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் தரப்பு எதிர்பார்த்த அளவுக்கு இந்த படத்தின் விலை இல்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையை லியோ படத்தை விட 30 சதவீதம் குறைத்து கேட்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் மிகுந்த அப்செட்டில் உள்ளது. கோட் வியாபாரம் பெரிய அளவில் இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. கில்லி படம் சக்கை போடு போட்டும், கோட் படத்துக்கு தியேட்டர் உரிமம் 30 சதவீதம் குறைவாக இப்போது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





