- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு தளபதி பட்டம் இவங்களாவே உருவாக்கியது... ஆனா அஜித்துக்கு அப்படி இல்ல... உண்மையை புட்டு புட்டு...

விஜய்க்கு தளபதி பட்டம் இவங்களாவே உருவாக்கியது… ஆனா அஜித்துக்கு அப்படி இல்ல… உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபலம்…

- Advertisement -

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட் ஆகியுள்ளார். பில்லா படத்தில் வரும் வசனத்தைப் போல், வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் தானே செதுக்கியது என்று அவர் கூறுவது அஜித்திற்கு கச்சிதமாக பொருந்தும். அமராவதி முதல் துணிவு திரைப்படம் வரை அஜித் தொட்ட உச்சங்களும் படுதோல்விகளும் ஏராளம்.

ஆரம்பத்தில் பைக் மெக்கானிக்காக இருந்து வந்த அவர், அங்கிருந்து விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். திரைத்துறைக்கு வர கடும் முயற்சியில் ஈடுபட்ட அவர், தெலுங்கில் வெளியான பிரேம புஸ்தகம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். இதைத்தொடர்ந்து தமிழிலும் அஜித்துக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

முதல் முறையாக அமராவதி படத்தில் நடித்த அஜித்திற்கு, ஆரம்பகட்டத்தில் பல படங்கள் தோல்வியாகவே அமைந்தன. இந்த நேரத்தில் இயக்குனர் வசந்த், ஆசை படத்தை எடுக்க அதில் நாயகனாக அஜித்தை வைத்தார். இந்த படம் ஹிட் அடிக்க, அங்கிருந்து அஜித் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

தனது கடுமையான முயற்சிகளால் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக அவர் ஜொலித்து வருகிறார். ஆரம்ப கட்டத்தில் அஜித்தை ஆசை நாயகன், லக்கி ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்கள் கூறி வந்தனர். தீனா படத்தில் மகாநதி சங்கர் அஜித்தை தல என்று அழைக்க, அதுவே பிறகு பட்ட பெயரானது.

- Advertisement -

இந்த நிலையில் தனக்கு தல பட்டம் வேண்டாம் என்று கூறிய அஜித் குமார், ஏகே என்று தன்னை அழைக்கலாம் என்று தெரிவித்தார். இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் பேசி இருக்கும் வீடியோ ஒன்றில், அஜித்திற்கு வைத்த அத்தனை பட்ட பெயர்களும் இயக்குனர்களோ தயாரிப்பாளர்களோ வைத்ததில்லை என்றும், ரசிகர்கள் தான் அவரைச் செல்லமாக அப்படி அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். அஜித்துக்கு கிடைத்த பட்ட பெயர்கள் எல்லாம் அதுவாகவே உருவானது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம் விஜய்க்கு அப்படி இல்லை. ஆரம்ப காலத்தில் எஸ்ஏ சந்திரசேகர் தான் விஜய்யை கதாநாயகனாக்க போராடினார். அப்போது அவரை பிரபலப்படுத்த தான் இளைய தளபதி என்று பெயரை அவர்கள் வைத்தார்கள். எஸ் ஏ சி அலுவலகத்திற்கு சென்றால், விஜய் கையொப்பமிட்ட புகைப்படத்தில் இளைய தளபதி என்றே போடப்பட்டிருக்கும். அவர்கள் தான் சேர்ந்து அந்த பட்டத்தை உருவாக்கினார்கள் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்