- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ்நாட்டில் தமிழ் படத்தை திரையிட தியேட்டர் கிடைப்பது இல்லை - சல்லியர்கள் படம் குறித்து ஆவேசமாக...

தமிழ்நாட்டில் தமிழ் படத்தை திரையிட தியேட்டர் கிடைப்பது இல்லை – சல்லியர்கள் படம் குறித்து ஆவேசமாக பேசிய தயாரிப்பாளர சுரேஷ் காமாட்சி!

- Advertisement -

இயக்குனர் கிட்டு என்பவர் இயக்கத்தில் உருவான படம் சல்லியர்கள். இன்று புத்தாண்டு தினத்தில் சல்லியர்கள் படம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டில் போதிய தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.

சல்லியர்கள் படம் ரிலீஸ் ஆவதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த விதத்திலும் உதவவில்லை என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குற்றம் சாட்டியிருக்கிறார். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சல்லியர்கள் படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பிரஸ்மீட்டில் கூறியதாவது, ஈழம் குறித்து பல்வேறு படங்கள் வந்தாலும் இது ஒரு வித்யாசமான கதைக்களத்தில் உருவான படமாகும்.

- Advertisement -

போர்க்களத்தில் பணி செய்த டாக்டர்கள், அந்த மருத்துவ அணி குறித்த ஒரு மனிதாபிமான அடிப்படையிலான கதையில் உருவான படம்தான் சல்லியர்கள். போர்க்களத்தில் எதிரிகளைக் கூட டாக்டர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் உயிரை எப்படி மதிக்கிறார்கள் என்ற கோணத்தில் இந்த கதை நகர்கிறது. முறைப்படி சென்சார் வாங்கி ஜனவரி 1ம் தேதியான இன்று இந்த படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்திருந்தோம்.

ஆனால் தமிழ்நாட்டில் வெறும் 27 ஸ்டேட்டர்கள் மட்டுமே கிடைத்தது. இந்த படத்துக்கு பலர் தியேட்டர்கள் தரவில்லை. குறிப்பாக பிவிஆர் குழுமம் ஒரு தியேட்டர் கூட ஒதுக்கவில்லை. இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவ வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை. சினிமா சங்கங்கள் பிளவுபட்டு கிடப்பதால் தயாரிப்பாளர்கள் தவிக்கிறோம்.

- Advertisement -

கோவையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்த போது பழைய பிரச்சினைக்காக படத்தை நிறுத்தி விட்டார்கள். பின்னர் பேசி அந்த பிரச்னையை முடித்தோம். தமிழ் படத்தை தமிழ்நாட்டில் திரையிட தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்ற அவலநிலை நீடிக்கிறது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 12 பெரிய படங்கள் தான் வருகிறது. சின்ன படங்கள் மிடில் பட்ஜெட் படங்கள் தான் தியேட்டர்களில் அதிகம் வருகின்றன. ஆனாலும் இப்படி தொடர்ந்து பல போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

சின்ன படங்களுக்கு தொடர்ச்சியாக இதே நிலைதான் உள்ளது. சினிமா சங்க பாலிடிக்ஸ் காரணமாக இப்படிப்பட்ட பல படங்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால் சல்லியர்கள் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சிக்கிறோம் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆவேசமாக பேசியிருக்கிறார். இது கோலிவுட்டில் தற்போது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்