- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் ரிலீஸ், அந்த ஒரு தப்பை மட்டும் பண்ணிடாதீங்க, அப்புறம் பிரச்னை உங்களுக்கு தான்...

ஜனநாயகன் படம் ரிலீஸ், அந்த ஒரு தப்பை மட்டும் பண்ணிடாதீங்க, அப்புறம் பிரச்னை உங்களுக்கு தான் – வினியோகஸ்தர்களை எச்சரித்த தயாரிப்பு நிறுவனம்!

- Advertisement -

கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் பண்டிகை நேரத்தில் திரைக்கு வந்திருக்க வேண்டிய ஜனநாயகம் திரைப்படம், 5 மாதங்கள் தாமதமான பிறகு இப்போது திரைக்கு வரும் ஒரு சூழல் உருவாகியுள்ளது. நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். இந்த படத்துக்கு சமீபத்தில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்மாத இறுதிக்குள் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்தது.

- Advertisement -

அதில் பேசிய படத்தின் தயாரிப்பு நிர்வாகிகள் கூறுகையில், ஜனநாயகன் படத்தை பொருத்தவரை எந்தவித பிரச்சனையும் ஏற்பட்டு விடக்கூடாது. குறிப்பாக அதிக விலையில் டிக்கெட் கட்டணங்கள் இருக்கக் கூடாது. அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.

ரசிகர்கள் காட்சி என்ற பெயரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வது தெரிய வந்தால் சட்டப்படி அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தற்போது முதலமைச்சராக இருப்பதால் அவர் நடித்துள்ள ஜனநாயகன் படம் திரைக்கு வருவதை எதிர்க்கட்சிகள் அதிக கவனத்துடன் அவர்கள் கூர்ந்து கவனித்து அதில் என்ன பிரச்னைகள் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

குறிப்பாக அதிக விலைக்கு டிக்கெட் விற்றால் அதை வைத்து பெரிய அளவில் பிரச்சனை செய்வார்கள். அது முதல்வர் விஜய்க்கு களங்கத்தை, அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால் டிக்கெட் விலையில் எந்த சமரசமும் இல்லாமல் அரசு நிர்ணயித்த கட்டணங்கள் மட்டுமே வசூலிக்க வேண்டும். மேலும் அதிக கட்டணம் வசூலித்தால் எங்கே தெரியப்போகிறது என்று கவனக்குறைவாக தியேட்டர் உரிமையாளர்கள் செயல்பட்டால், அந்த தியேட்டர்களில் திடீர் ஆய்வு நடத்தப்படும்.

அதில் உண்மை கண்டறியப்படும் பட்சத்தில் அந்த தியேட்டரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அபராதம் மிதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த ஒரு விஷயத்தில் வினியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணங்களை விட ஒரு ரூபாய் கூட அதிக கட்டணம் வசூலித்து விடக்கூடாது என்று ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்