- Advertisement -
தமிழ் சினிமாவில் 62 வயதிலும் ஹீரோவாக நடித்து வருபவர் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன். தீவிரமான ஆஞ்சநேயர் பக்தர். பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் சென்னையில் தனது சொந்த இடத்தில் மிக பிரமாண்டமான ஆஞ்சநேயர் கோவில் கட்டியிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் நடிக்கும் புதிய திரைப்படம் அயோத்தி ராமர் கோயிலில் நாளை பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்குகிறது. இந்திய வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் பூஜை விழா அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி ஆலயத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். அதுவும் ஆஞ்சநேயர் தீவிர பக்தர் நடிகர் அர்ஜூன் நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.





