நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் புஷ்பா. இந்த படத்தை டைரக்டர் சுகுமாரன் டைரக்ட் செய்திருந்தார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஹீரோ அல்லு அர்ஜூன், மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருதை பெற்றார்.
தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட இந்த படம், ஆந்திராவில் செம்மரக் கடத்தல் கதையை பின்னணியாக கொண்டிருந்தது. இதில் ஹீரோவாக அல்லு அர்ஜூன், புஷ்பராஜ் என்ற கேரக்டரில் வேற லெவலில் நடித்திருந்தார். குறிப்பாக அதிரடி சண்டைக்காட்சிகளில், வெளுத்து வாங்கியிருந்தார். நாயகி ராஷ்மிகா மந்தனாவும் நடிப்புடன், தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.
படத்தில் இறுதியில் சில காட்சிகளே வந்தாலும் பகத் பாசில் நடிப்பு வேற லெவலில் இருந்தது. போலீஸ் எஸ்பி அதிகாரியான அவர், ஒண்ணு குறையுது, ஒண்ணு குறையுது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். கடைசியில் அது பணக்கட்டு அல்ல, அவருக்கு தர வேண்டிய சார் என்கிற மரியாதை தான் என்பது படத்தில் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
புஷ்பா 2 படம், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படத்தில் இன்னும் சில முக்கிய காட்சிகளை எடுக்க வேண்டி இருப்பதால், டிசம்பர் 6ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்றும் ஒரு அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது அதுவும் சாத்தியமில்லை என்பது தெரிய வந்துள்ளது.
ஏனெனில், புஷ்பா 2 படத்தில் 60 நாட்கள் நடத்தப்பட்ட ஷூட்டிங்கை, மீண்டும் ரி ஷூட் செய்ய வேண்டும் என்று டைரக்டர் சுகுமாறன் கூறியதை கேட்டு டென்சன் ஆகி இருக்கிறார் அல்லு அர்ஜூன். ஏற்கனவே ஏகப்பட்ட நாட்கள் கால்ஷீட் தந்த நிலையில், வேண்டுமானால் 20 முதல் 25 நாட்கள் தருகிறேன் என்று கூறியதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடுப்பான அல்லு அர்ஜூன், படத்தின் கெட்டப்பை மாற்றும் விதமாக, தாடியை டிரிம் செய்துவிட்டு, குடும்பத்துடன் சிங்கப்பூர் சுற்றுலா சென்றுள்ளார். அதே போல், கடுப்பில் இருந்த டைரக்டர் சுகுமாறனும் இப்போது அமெரிக்கா சென்றுவிட்டார். இப்படி புஷ்பா 2 படத்தின் ஹீரோ, டைரக்டர் இருவரும் வெளிநாடுகளுக்கு டூர் சென்றுவிட்டதால், டிசம்பர் 6ம் தேதி புஷ்பா 2 ரிலீஸ், வாய்ப்பில்ல ராஜா என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.





