- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதிர்பார்த்த வரவேற்பை தராத ரசிகர்கள், வினியோகஸ்தர்கள் எடுத்த அதிரடி முடிவு, அந்தரத்தில் தொங்கும் புஷ்பா 2...

எதிர்பார்த்த வரவேற்பை தராத ரசிகர்கள், வினியோகஸ்தர்கள் எடுத்த அதிரடி முடிவு, அந்தரத்தில் தொங்கும் புஷ்பா 2 – பில்டப்பு அளவாக இருக்கணும் ப்ரோ!

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த படம் புஷ்பா. சுகுமாறன் இயக்கத்தில் கடந்த 2022ல் வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் மூவியாக பலத்த வெற்றியை பெற்றது. ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்தது.

இந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி , ஊ சொல்றியா மாமா உள்ளிட்ட பாடல்கள் செம ஹிட் ஆகின. அதிலும் சமந்தா போட்ட குத்தாட்டம், படத்துக்கு பெரிய அளவில் மாஸ் காட்டியது. புஷ்பராஜ் கேரக்டரில் வேற லெவலில் நடித்திருந்தார் அல்லு அர்ஜூன். பகத் பாசில் கடைசியில் சில காட்சிகளில் வந்தாலும், முத்திரை பதித்திருந்தார். சுனில் நடிப்பும் பிரமாதமாக இருந்தது.

- Advertisement -

செம்மர கட்டைகள் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கேங்ஸ்டர் படத்தில், ஒவ்வொரு காட்சிகளிலும் ஹீரோயிசம் தூள் பறந்தது. எனினும் கதைக்கேற்ப அந்த பில்டப் இருந்ததால் ரசிகர்கள் அதை வெகுவாக ரசித்தனர். படமும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. முதல் பாகமாக புஷ்பா வெளிவந்து சக்கை போடு போட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 15ல், புஷ்பா 2 ரிலீஸ் ஆகிறது.

புஷ்பா முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், புஷ்பா 2ம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் ரூ. 500 கோடியில் உருவாக்கினர். இதில் அல்லு அர்ஜூன் ஹீரோயிசம் காட்டும் பில்டப் காட்சிகளையும் மிக அதிகமாக சேர்த்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் என முதல் பாகத்தில் நடித்தவர்களும் இதில் நடித்துள்ளனர்.

- Advertisement -

ஆனால் இப்போதைய சூழலில், பான் இந்தியா படங்களாக, பெரிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து வருவதால், அந்த படங்களை பார்த்து, பார்த்து ரசிகர்களுக்கு போரடித்து விட்டது. சலித்து போய்விட்ட காரணத்தால், இதுபோன்ற கேங்ஸ்டர் படங்களை பார்க்க ரசிகர்களிடம் போதிய ஆர்வம் இல்லை. இதனால் பாலிவுட் படங்களுக்கே ரசிகர் கூட்டம் போதிய அளவுக்கு வராத நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவிலும் அந்த நிலையே நீடிக்கிறது.

அதனால் புஷ்பா 2 படத்தை மிகவும் குறைந்த விலைக்கே வினியோகஸ்தர்கள் கேட்டுள்ளனர். படத்தயாரிப்பு தரப்பில் கூறப்பட்ட விலையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அடிமாட்டு விலைக்கு ஆந்திரா, தெலுங்கானா தியேட்டர் உரிமம் இருப்பது, படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. புஷ்பா 2 கிளிப்பிங் வீடியோ, டிரெயிலர் எதுவுமே போதிய வரவேற்பை ரசிகர்களிடம் பெறாததும் இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. புஷ்பா 2 படம் பட்ஜெட்டை கடந்து வசூலிப்பதே கஷ்டம் என்றும் ஒரு பேச்சு பரவலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்