- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் 68 கூட்டணி இவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விடுமா - நீண்ட ஆண்டுகளுக்கு பின்...

விஜய் 68 கூட்டணி இவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விடுமா – நீண்ட ஆண்டுகளுக்கு பின் வெள்ளித்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கும் மாஜி ஹீரோக்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் மல்ட்டி ஸ்டார்ஸ் நடிப்பதுதான் தற்போதைக்கு டிரண்டிங்காக மாறி இருக்கிறது. ஒரே படத்தில், நான்கைந்து முக்கிய நடிகர்கள் இணைந்து நடிப்பது, பான் இந்தியா படமாக அதை மாற்றி, பல நூறு கோடிகளை வசூலை வாரி குவித்துவிடுகிறது. இது ஒரு விதத்தில் படங்களை தயாரிக்கும் கார்பரேட் நிறுவனங்களின் வியாபார யுக்தியாகவும் பார்க்கப்படுகிறது.

விஜய் 68 படத்தை, இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குகிறார். சென்னை 28, மாநாடு, மங்காத்தா போன்ற முக்கிய படங்களை தந்தவர் என்பதால், அதிக எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. இதில் முதன்முறையாக விஜய் சம்பளம் ரூ. 200 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நீண்டகால இடைவெளிக்கு பிறகு, நடிகர் மோகன் நடிக்கிறார். மைக் மோகன் என்றால் சட்டென நினைவுக்கு வந்துவிடும். கடந்த 1980, 90களில் தமிழ் சினிமாவின் ஆதர்ஷன நாயகன். இவர் படங்கள் என்றாலே, 100 நாட்கள் கண்டுவிடும். பத்து ஆண்டுகளுக்கு மேல், கால்ஷீட் தரமுடியாத அளவுக்கு பிஸியாக இருந்த ஒரு நடிகர் மோகன்.

அதே போல், நடிகர் பிரசாந்த், வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ், மணிரத்னம் இயக்கிய திருட திருடா போன்ற பல நல்ல படங்களில் நடித்தவர். ஒரு கட்டத்துக்கு பிறகு, இவரது படங்கள் தொடர்ந்து ஏமாற்றங்களை தர, சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டார். இவர் நடிகர் தியாகராஜன் மகன் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், விஜய் 68 படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார். அதுவும், இதுவரை அவரது சினிமா வாழ்க்கையில் நினைத்துக்கூட அளவில், ரூ. 2 கோடி சம்பளமாக அவருக்கு இந்த படத்தில் நடிக்க வழங்கப்பட்டுள்ளது. அதுவும் வில்லன் கேரக்டரில் அவரது நடிப்பை, ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.

நடிகர் பிரசாந்த், இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்த படத்தில் விஜய் நண்பராக, வயது குறைந்த தோற்றத்தில் காட்சியளிக்க அவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று, டீஏஜிங் பண்ணப் போவதாக தகவல் வந்துள்ளது. மொத்தத்தில் மோகன், பிரசாந்த் ஆகிய இரண்டு மாஜி ஹீரோக்களுக்கும் இந்த விஜய் படம் கை கொடுக்குமா, என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக ரசிகர்களிடையே காணப்படுகிறது.

சற்று முன்