- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் வெற்றிமாறனையே ஓவர் டேக் செய்த அல்லு அர்ஜூன் பட இயக்குனர்? தயாரிப்பாளர் பாவமில்லையா?

அந்த விஷயத்தில் வெற்றிமாறனையே ஓவர் டேக் செய்த அல்லு அர்ஜூன் பட இயக்குனர்? தயாரிப்பாளர் பாவமில்லையா?

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகத்தை இரண்டு ஆண்டுகளாக படமாக்கினார். முதலில் 30 நாட்களே ஷூட்டிங் என்று சொல்லி அழைத்துப்போனவர் இரண்டு பாகங்களுக்கான படத்தை எடுத்துவிட்டார். அதன் பின் தற்போது “விடுதலை” இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

இத்திரைப்படத்திற்கு 15 நாட்கள்தான் ஷூட்டிங் பாக்கி என்று அழைத்துக்கொண்டுப் போனார். ஆனால் இப்போது வரை இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் இந்த விஷயத்தில் வெற்றிமாறனையே ஒருவர் ஓவர் டேக் செய்ய முயன்று வருகிறாராம். “புஷ்பா” படத்தை இயக்கி வரும் சுகுமார்தான் அவர்.

“புஷ்பா” திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் ஆனது. தமிழ் ரசிகர்களும் அல்லு அர்ஜூனின் வெறித்தனமான நடிப்பை பார்த்து அசந்துப்போனார்கள். இத்திரைப்படம் முதலிலேயே இரண்டு பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.

அதன் படி முதல் பாகம் வெளிவந்த பிற்கு இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கியது. அந்த சமயத்தில்தான் “கேஜிஎஃப் 2” திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்றிருந்தது. ஆதலால் “புஷ்பா 2” திரைக்கதையில் சில சுவாரஸ்யங்களை அதிகப்படுத்தி படப்பிடிப்பை தொடரலாம் என படக்குழுவினர் முடிவு செய்தனர்.

அதன் பின் “புஷ்பா 2” படப்பிடிப்பும் தொடங்கியது. கடந்த ஆண்டு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு முடிவடையும் தருவாயில் கூட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தபாடு இல்லை.

அதாவது இதுவரை 56 நாட்கள்தான் படப்பிடிப்பு நடந்துள்ளதாம். மேலும் சில காட்சிகள் சரியாக வரவில்லை என்று 15 நாட்கள் ரீஷூட் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். அது போக இன்னும் 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த தகவலை பகிர்ந்த வலைப்பேச்சு சக்தி, “தெலுங்கிலும் ஒரு வெற்றிமாறன்” என சுகுமாரை கலாய்த்துள்ளார்.

சற்று முன்