இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பாகுபலி பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், உலகநாயகன் கமல், திசா பதாணி, பசுபதி என பல முக்கிய நடிகர்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “ப்ராஜெக்ட் கே” இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்திய மதிப்பில் சுமார் 600 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த “ப்ராஜெக்ட் கே” திரைப்படத்தின் டைட்டில் வீடியோ இன்று வெளியாகியது, அதன் மூலம் இந்த படத்தின் பெயரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று வெளியான இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் “கல்கி 2898 -AD” என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இந்த மாபெரும் பிரமாண்ட படத்தை வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்று காலை வெளியான இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

தென்னிந்திய திரையுலகம் மட்டுமின்றி வட இந்திய நடிகர்களும் இடம் பெற்றுள்ள இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசனும் இருக்கிறார் என்பது ஏற்கனவே ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்த வேளையில் கமலஹாசன் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை மேலும் குஷியாக்கி உள்ளது.
அந்த வகையில் கமலஹாசன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் எந்த ஒரு படத்திலிமே நெகட்டிவ் ரோல் இல்லாமல் பாசிட்டிவ் ரோல் கிடையாது. ஒரு படத்திற்கு நெகட்டிவ் ரோல் மிகவும் முக்கியமானது என்பதனால் இந்தப் படத்தில் நெகட்டிவ் ரோலில் கமலஹாசன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.





