- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்ன கொடும சார் இது… புலம்பித் தள்ளும் தியேட்டர் ஓனர்கள், புஷ்பா 2 படத்தின் நீளம்...

என்ன கொடும சார் இது… புலம்பித் தள்ளும் தியேட்டர் ஓனர்கள், புஷ்பா 2 படத்தின் நீளம் எவ்ளோ தெரியுமா? – இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?

- Advertisement -

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், ஒரு திரைப்படம் என்பது 3 மணி நேரத்துக்கு மேல் இருந்திருக்கிறது. சில படங்கள் மூ்ன்றரை மணி நேரம் கூட ஓடியிருக்கிறது. ஆனால் அது கருப்பு வெள்ளை படங்களின் காலம். இரவு 10 மணி காட்சி ஆரம்பித்தால், கிராமப்புறங்களில் சினிமா கொட்டகைகளுக்கு நடந்து செல்வோர், வீடு திரும்பும் போது விடிந்துவிடும் என்று சொல்வார்கள்.

ஆனால் அதற்கு பிறகு திரைப்படங்களின் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டது. ஏனென்றால் அதிக நேர படங்களை உருவாக்கும் போது நடிகர்களின் கால்ஷீட், படப்பிடிப்பு செலவு, படம் தயாரிப்பு செலவு என பட்ஜெட் பலமடங்கு எகிறி விடுகிறது. இதையடுத்து இரண்டரை மணி நேரத்துக்குள் படங்களை முடிப்பது வழக்கமானது.

- Advertisement -

அதுமட்டுமின்றி தியேட்டர்களில் 3 மணி நேரத்துக்கு மேல் படங்கள் ஓடினால், பண்டிகை நாட்களில் சிறப்பு காட்சிகளாக 5 காட்சிகளை திரையிடுவதிலும் சிக்கல் ஏற்படும். தியேட்டர் பராமரிப்பு, மின்சார செலவு போன்ற நிர்வாக செலவுகளும் தியேட்டர் ஓனர்களுக்கு அதிகரிக்கும். அதனால் குறைந்த நேர படங்களால் இந்த சிக்கல்கள் தவிர்க்கப்படும்.

அதனால் கடந்த 1990களுக்கு பிறகு பெரும்பலான படங்கள், 2மணி நேரம் 15 நிமிடங்கள் என்ற அளவுக்குள் இருந்தன. இதில் சில படங்கள் 2 மணி நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னதாக முடிக்கப்பட்டன. ஒரு சில படங்கள் மட்டுமே இரண்டரை மணி நேரம் வரை நீடித்தது. அதுவும் ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களின் படமாக மட்டுமே இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் வருகிற டிசம்பர் 5ம் தேதி அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் நடித்த புஷ்பா 2 படம் வெளியாக உள்ளது. இந்த படம் தியேட்டர்களில் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் வரை ஓடும் என்று கூறப்படுகிறது. இதில் இடைவேளை 20 நிமிடங்கள் வரை இருந்தால், ஏறக்குறைய 4 மணி நேரம், தியேட்டர்களில் ரசிகர்கள் இருந்தாக வேண்டும். ஒரு படத்தை ஆரம்பித்து முடிக்க, தியேட்டர்களில் 4 மணி நேரம் ஆகிவிடும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியான புஷ்பா படம், 178 நிமிடங்கள் ஓடியது. அதாவது 3 மணி நேரத்துக்கு 2 நிமிடங்கள் மட்டுமே குறைவு. 2 மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடியது. ஆனால் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள புஷ்பா 2 படத்தின் நீளம் 201 நிமிடங்கள். அதாவது 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்று தெரிய வந்துள்ளது. இதனால் 5 காட்சிகளை திரையிடுவதும் சிக்கல், ஒவ்வொரு காட்சிக்கும் மின்சாரம், நிர்வாக செலவுகள் அதிகரிக்கும் என்று தியேட்டர் ஓனர்கள் புலம்புகின்றனர். அத்துடன் மூன்றரை மணி நேரம் ஒரு படத்தை ரசிகர்களால் பொறுமையாக பார்க்க முடியுமா, என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்