- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழில் எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படறீங்க, தொகுப்பாளரின் கேள்விக்கு யாரும் எதிர்பார்க்காத செயலை செய்த...

தமிழில் எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படறீங்க, தொகுப்பாளரின் கேள்விக்கு யாரும் எதிர்பார்க்காத செயலை செய்த அல்லு அர்ஜூன் – இப்படி பின்றீங்களே ப்ரோ…?

- Advertisement -

வருகிற டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 படம் ரிலீஸாக உள்ளது. இதையொட்டி 2 தினங்களுக்கு முன், சென்னையில் புஷ்பா 2 படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் நடிகர் அல்லு அர்ஜூன், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட புஷ்பா 2 படக்குழுவினர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய அல்லு அர்ஜூன், தமிழ்நாட்டில் சென்னையில் நான் 20 ஆண்டுகள் வாழ்ந்தவன். நான் எங்கு சென்றாலும், எத்தனை சாதனைகள் செய்தாலும் அது தமிழ்நாட்டுக்குதான் சொந்தம். நான் சென்னை தி நகர் பையன் என்று பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

- Advertisement -

தெலுங்கில் பேச சொல்லி ரசிகர்கள் கூச்சலிட்ட நிலையில், எந்த மண்ணில் நிற்கிறோமோ அந்த மண்ணின் மொழியில்தான் பேச வேண்டும். அதுதான் சிறந்த பண்பாடு, அதுதான் கலாசாரம் என்று என்று கூறிவிட்டு விழா மேடையில் தொடர்ந்து தமிழில் பேசி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். சென்னையில் இருந்த போது ரஜினி ரசிகராக அவரது படங்களை பார்ப்பேன் என்றும் ரஜினி போல ஸ்டைல் செய்து காட்டினார்.

புஷ்பா 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் ஆர்ஜே விஜய், தமிழில் வேறு ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வருகிறது, அப்படி வந்தால் நடிக்க நீங்கள் சம்மதிப்பீர்களா, என்று மேடையில் நின்றிருந்த அல்லு அர்ஜூனை பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கு அல்லு அர்ஜூன், கதை நன்றாக இருந்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன். அதில் சந்தேகமில்லை. கதை பிடித்திருந்தால் அவர்களுடன் பணிசெய்வேன் என்றார்.

- Advertisement -

சார், அப்படீன்னா நீங்கள் சேர்ந்து நடிக்க விரும்பும் ஒருவர்… என்று ஆர்ஜே விஜய் கேட்க, நீங்கதான் பிரதர் என்று அவரையே பார்த்து அல்லு அர்ஜூன் கை நீட்டினார். நீங்கதான் பிரதர், வாங்க பிரதர் என்று ஆர்ஜே விஜயை அருகே அழைத்தார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ஆர்ஜே பாலாஜி அவர் அருகே சென்று உணர்ச்சிவசப்பட்டார். ஐ லவ் யூ சார் என்றார்.

அவர் தோள் மீது அல்லு அர்ஜூன் கை போட்டுக்கொண்டு சிரித்தார். அப்போது அல்லு அர்ஜூன், இதுவரை நான் பார்த்த வரைக்கும் பெஸ்ட் ஆங்கர் நீங்கதான். நான் உங்ககூட பார்ட்டி பண்ண ஆசைப்படறேன். அந்தளவுக்கு மிகவும் நாகரிகமாக, சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றும் அல்லு அர்ஜூன் ஆர்ஜே விஜயை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்