- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா 2 படத்தை தொடர்ந்து புஷ்பா 3 படம் உருவாகிறதா? புகைப்படம் மூலமாக சூசகமாக சொன்ன...

புஷ்பா 2 படத்தை தொடர்ந்து புஷ்பா 3 படம் உருவாகிறதா? புகைப்படம் மூலமாக சூசகமாக சொன்ன படக்குழு – போட்றா வெடிய… ஐகான் ஸ்டார் காட்டுல மழைதான்!

- Advertisement -

ஒரு திரைப்படம் முதல் பாகமாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று விட்டால் அதன் 2ம் பாகம், 3ம் பாகம் என அடுத்தடுத்து வெளியாவது சகஜமாகி விட்டது. தமிழில் அப்படி நிறைய படங்கள் அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றிகளை பெற்றிருக்கின்றன. இப்போதும் பல படங்கள் 2ம் பாகங்களாக தயாராகி அடுத்து திரைக்கு வர இருக்கின்றன.

முனி படத்தை தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 படங்களை இயக்கி தயாரித்த ராகவா லாரன்ஸ் இப்போது காஞ்சனா 4 படத்தை இயக்கி வருகிறார். அதே போல் சுந்தர் சி அரண்மனை படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அரண்மனை 2, அரண்மனை 3, அரண்மனை 4 ஆகிய படங்களை இயக்கி வெற்றி பெற்றார். இப்போது அரண்மனை 5 படம் உருவாக்கும் பணியில் உள்ளார்.

- Advertisement -

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய டிமாண்டி காலனி படத்தின் வெற்றிக்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து வெளியான டிமாண்டி காலனி 2 படமும் பெரிய வெற்றி பெற்றது. அடுத்து டிமாண்டி காலனி 3 படம் உருவாக உள்ளது. விடுதலை படத்துக்கு பின், விடுதலை 2 படம் வரும் 20ம் தேதி வெளியாகிறது. விடுதலை 3 படமும் வர வாய்ப்புள்ளது. அதே போல் இந்தியன், இந்தியன் 2 படங்களை தொடர்ந்து இந்தியன் 3 வெளியாக உள்ளது.

அதே போல் சர்தார் 2, கைதி 2, 96 படத்தின் 2ம் பாகம், கங்குவா 2ம் பாகம் என அடுத்தடுத்து படங்கள் உருவாகின்றன. அதே போல் புஷ்பா, புஷ்பா 2 படங்களை தொடர்ந்து புஷ்பா 3 படமும் வெளியாக உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு புகைப்படம் வாயிலாக சூசகமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது புஷ்பா 3 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

புஷ்பா, புஷ்பா 2 என இரண்டு பாகங்களுடன் , இப்போது புஷ்பா 3ம் பாகம் உருவாகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. சென்னையில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, புஷ்பா படத்தின் சூட்டிங் முடித்தபிறகு எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை; எதையோ மிஸ் பண்ணும் உணர்வு எனக்குள் வந்தது. என் வாழ்க்கை புஷ்பா படத்துக்கு சமம் புஷ்பா பாகம் 1 பாகம் 2 மற்றும் பாகம் 3 என்று பேசி இருந்தார்.

இந்த சூழலில் புஷ்பா 2 படத்தின் இசை கோர்ப்பு பணிகள் முடிந்ததை குறிக்கும் வகையிலான ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்டோர் நிற்கின்றனர். அவர்களுக்கு பின்புற பேனரில் புஷ்பா 3 புகைப்படம் தெரிகிறது. அதில் புஷ்பா 3 தி ராம்பேஜ் என்ற வாசகங்கள் உள்ளது. இதன் மூலம் புஷ்பா 3 படம் நிச்சயமாக வரும் என்பது உறுதியாகிறது.

- Advertisement -

சற்று முன்