- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரம்மாண்டமாக நடக்கப் போகும் ராயன் பட இசை நிகழ்ச்சி... அப்புறம் தனுஷின் ஐம்பதாவது படம்னா சும்மாவா...

பிரம்மாண்டமாக நடக்கப் போகும் ராயன் பட இசை நிகழ்ச்சி… அப்புறம் தனுஷின் ஐம்பதாவது படம்னா சும்மாவா…

- Advertisement -

தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் குறித்த பேச்சு தான் தமிழ் சினிமாவில் தற்போது நிலவி வருகிறது. படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் நடிகர் தனுஷ் இந்த முறை தனது ஐம்பதாவது படத்திற்காக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். ராயன் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

- Advertisement -

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையும் இந்த திரைப்படத்தில் தனுஷ் நடிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக தனுஷின் அண்ணன் செல்வராகவன் ராயல் படத்தில் முக்கியமான கேரக்டரில் வருகிறார். இதுபோக எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

 

- Advertisement -

தனுஷின் சகோதரியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். அபர்ணா பால முரளி, சந்தீப் கிஷன், காளிதாஸ் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய நிலையில், ஒரே கட்டமாக அனைத்து காட்சிகளையும் எடுத்து அசத்தினர் தனுஷ்.

 

படத்தில் பெரும்பாலான காட்சிகள் கிழக்கு கடற்கரை சாலையில் செட் போட்டு எடுக்கப்பட்டன. அவுட்டோர் காட்சிகளுக்காக காரைக்குடி பகுதியில் சில நாட்கள் முகாமிட்டார் தனுஷ். தற்போது இந்த படத்தில் காண, போஸ்ட் புரொடக்சன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.

 

அண்மையில் படத்திலிருந்து அடங்காத அசுரன் என்ற பாடல் வெளியானது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. ஒரு சிலர் பாடல் நன்றாக இருப்பதாகவும் கூடி வருகின்றனர். இது திரைப்படம் பழிக்கு பழிக்கு கதை தான் என்றும், தனுஷின் கதாபாத்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

 

இப்படியான சூழலில், ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஜூன் 1ஆம் தேதி இதற்கான இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றிருப்பதாகவும், தனுஷ் உடன் பணிபுரிந்த இயக்குனர்கள் பலரும் இதில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்