- Advertisement -
Homeபொழுதுபோக்குசீனியர் நடிகர் ராதாரவிக்கு விஜய் தரப்பில் இருந்து நேர்ந்த அவமானம், அப்படீன்னா சாதாரண ரசிகனின் நிலை?...

சீனியர் நடிகர் ராதாரவிக்கு விஜய் தரப்பில் இருந்து நேர்ந்த அவமானம், அப்படீன்னா சாதாரண ரசிகனின் நிலை? – விஜய் இதெல்லாம் கண்டுக்க மாட்டாரா?

- Advertisement -

நடிகவேள் எம்ஆர் ராதா மகன் நடிகர் ராதாரவி. தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் மிக முக்கியமானவர். 45 ஆண்டுகளாக ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகராக தன்னை வெளிப்படுத்தி, ரசிகர்களை அசத்தியவர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர். நடிகை ராதிகாவின் சகோதரர். நடிப்பில் பல பரிணாமங்களை காட்டியவர்.

நடிகர் ராதாரவியை பொருத்த வரை எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அவரது தந்தை எம்ஆர் ராதா, தங்கை ராதிகா உள்ளிட்ட அனைவருமே எதையுமே வெளிப்படையாக பேசுபவர்கள். துவக்கத்தில் திமுக, பிறகு அதிமுக, இப்போது பாஜக என கட்சிகளில் ஆர்வம் காட்டி வருகிறார் ராதாரவி.

வைதேகி காத்திருந்தாள், சின்னதம்பி, இது நம்ம பூமி, சின்ன மாப்ளே போன்ற பல படங்களில் ராதாரவியின் நடிப்பு, வேற லெவலில் இருக்கும். வில்லனாகவும் அவரால் மிரட்ட முடியும். பாசமிகு தந்தையாகவும் தன் நடிப்பில் அசத்துவார். காமெடி செய்தும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்.

நடிகர் ராதாரவி, நடிகர் விஜயுடன் காதலுக்கு மரியாதை, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். நேர்காணல்களில் பேசும் போது விஜய் குறித்து மிகவும் உயர்வாக ராதாரவி பேசுவார். ஆனால் சமீபகாலமாக விஜயை நேரில் சந்திப்பதையே விட்டுவிட்டேன் என்றும், அதற்கான காரணம் குறித்தும் சமீபத்தில் ஒரு நேர்காணலில் ராதாரவி பேசியிருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் ராதாரவி கூறுகையில், என்னுடைய பேரன், நடிகர் விஜயின் மிகத் தீவிரமான ரசிகன். அவரை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தான். சர்கார் படத்தில் விஜயுடன் நடித்த போது அவரிடம் இதுபற்றி சொன்னேன். விஜயும், வரச்சொல்லுங்கள் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து ஒருநாள் பேரன் உள்ளிட்ட தன் குடும்பத்தை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ராதாரவி அழைத்து வந்திருக்கிறார். ஷூட்டிங் முடியும் வரை காத்திருந்து, விஜய் மேக்கப் கலைத்த பின், அவர்கள் அனைவரும் விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக சென்றிருக்கின்றனர். அதன்பிறகு ஒருமுறை விஜயை நேரில் சந்திக்க வேண்டும் என்று விஜய் மேனேஜரிடம் போனில் பேசியிருக்கிறார். அதற்கு அவர், நீங்கள் வந்தால் சந்திக்கலாம், ஆனால் முன்பு போல் கூட்டத்தை கூட்டீட்டு வந்துடாதீங்க என்றார். நான் பார்க்கவே வரலை என்று போனை கட் செய்துவிட்டேன், என்று ராதாரவி கூறியிருக்கிறார்.

சற்று முன்