- Advertisement -
Homeபொழுதுபோக்குச்சீ… இதெல்லாம் ஒரு படமா? - இப்படி எல்லாம் கூட படம் எடுப்பார்களா? - ஆவேசப்பட்ட...

ச்சீ… இதெல்லாம் ஒரு படமா? – இப்படி எல்லாம் கூட படம் எடுப்பார்களா? – ஆவேசப்பட்ட நடிகை ராதிகா சரத்குமார்; இந்தளவுக்கு அவரை டென்சன் செய்த படம் அதுதானா ?

- Advertisement -

நடிகை ராதிகா சரத்குமார், நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ராடன் மீடியா என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இதுவரை பல படங்களை, பல டிவி சீரியல்களை தனது ராடன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

நடிகர் சரத்குமாரின் மனைவியான ராதிகா, தனது கணவர் நடத்தி வரும் சமத்துவ மக்கள் கட்சியில் முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் பல முன்னணி நாயகர்களுடன் நடித்தவர். ஒரு காலகட்டத்தில், இவருக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்த நிலையில், சில காரணங்களால் அது நின்று போனது.

- Advertisement -

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக். மோகன், சரத்குமார் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். சித்தி, அண்ணாமலை, வாணி ராணி என டிவியில் தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ராதிகா. தமிழ் சினிமாவில் எந்த கேரக்டர் என்றாலும் அனாயசமாக நடித்துவிடும் ஆற்றல் கொண்ட நடிகைகளில் ராதிகாவும் ஒருவர்.

சமீபத்தில் ஒரு படம் பார்த்திருக்கிறார் நடிகை ராதிகா. அந்த படத்தை பார்த்த அவர் பயங்கர அதிருப்தியும் கோபமும் அடைந்திருக்கிறார். ச்சீ.. இதெல்லாம் ஒரு படமா, இப்படி எல்லாம் கூட படம் எடுப்பார்களா என ஆவேசமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். ஆனால் நாகரிகம் கருதி அந்த படத்தின் பெயர் என்னவென்று ராதிகா குறிப்பிடவில்லை.

- Advertisement -

இதுவரை எந்த படத்தை பற்றியுமே நடிகை ராதிகா சரத்குமார் இப்படி வெளிப்படையாக திட்டியதில்லை. முதன்முறையாக தனது எக்ஸ் பக்கத்தில், அந்த படம் குறித்து தனது கடும் அதிருப்தியை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் அப்போதும் நாகரிகம் கருதி அந்த படத்தின் பெயரை குறிப்பிடாமல் அவர் தவிர்த்திருக்கிறார்.

ஆனால் ராதிகா சரத்குமார் குறிப்பிடும் படம் நிச்சயம் ரன்வீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் படமாக தான் இருக்கும். ஏனெனில், சமீபத்தில் வெளியான படங்களில் மிக மோசமான விமர்சனத்தை பெற்ற படமாக அதுதான் இருந்து வருகிறது. அதனால் நிச்சயம் அது அனிமல் படம் குறித்த விமர்சனம்தான் என நெட்டிசன்கள் தங்களது பதிவுகளை செய்து வருகின்றனர். அதில் ஒரு சிலர், இவர் சலார் படத்தை சொல்கிறாரோ என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்