- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள சினிமா படப்பிடிப்பில் அப்படிப்பட்ட தகாத சம்பவம் நடந்தது - பல நாட்களுக்கு பின் உண்மையை...

மலையாள சினிமா படப்பிடிப்பில் அப்படிப்பட்ட தகாத சம்பவம் நடந்தது – பல நாட்களுக்கு பின் உண்மையை சொன்ன நடிகை ராதிகா சரத்குமார் – அட கேக்கவே காது கூசுதே?

- Advertisement -

கேரளாவில் மலையாள சினிமாவில் பாலியல் துன்புறுத்தல் மிக அதிகமாக இருந்து வருகிறது என்ற 239 பக்க விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் வெளியிட்ட நிலையில், அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கம் ( அம்மா) மீதும் பல குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்த நிலையில் சங்கத் தலைவர் நடிகர் மோகன்லால் உள்பட 17 கமிட்டி நிர்வாகிகளும் தங்களது பதவிகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். அம்மா சங்கமும் கலைக்கப்பட்ட நிலையில் இதுவும் கடும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

- Advertisement -

சினிமா வாய்ப்புக்காக வரும் புதுமுக நடிகைகளையும், படங்களில் வாய்ப்பு கேட்கும் வளரும் நடிகைகளையும் பாலியல் அழுத்தங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர், பாலியல் சீண்டல்களுக்கு சம்மதித்தால் மட்டுமே பட வாய்ப்பு என நிர்பந்திக்கப்படுவது உண்மைதான் என்பதை ஹேமா கமிஷன் உறுதிபடுத்திய நிலையில், தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளான நடிகைகள் பலரும் தங்களது புகார்கள் கூறத் துவங்கி விட்டனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் சீனியர் நடிகையாக உள்ள நடிகை ராதிகா சரத்குமார் மலையாள சினிமா பட படப்பிடிப்பில் நடந்த ஒரு விஷயத்தை வெளிப்படையாக இப்போது கூறியிருக்கிறார். இது பலத்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மலையாளத்தில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என எல்லா சினிமா துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் பிரச்னை இருந்து வருகிறது.

- Advertisement -

மலையாள பட ஷூட்டிங் நடந்தது. அப்போது கூட்டமாக அமர்ந்து நடிகர்கள் மொபைல் போன் பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தனர். நான் அதை பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டேன். பிறகு நான் அதுபற்றி விசாரித்த போது, கேரவன் வேனுக்குள் ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ளது. அதில் நடிகைகள் உடை மாற்றுவதை மொபைலில் பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது.

இதனால் நான் கேரவனுக்குள் சென்று உடை மாற்றாமல், ஓட்டலுக்கு சென்று உடை மாற்றினேன். இதுகுறித்து சக நடிகைகளையும் எச்சரித்தேன். பிறகு கேரவன் ஆட்களை அழைத்து, கேரவனுக்குள் கேமரா வைத்தால் செருப்பால் அடிப்பேன் என எச்சரித்தேன். அது எந்த படத்தின் படப்பிடிப்பு என்று சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். கலைத்துறையில் செல்வாக்கு மிக்க நடிகை ராதிகா இவ்வளவு நாட்களாக இதுபற்றி பேசாதது ஏன் என்ற கேள்வியும் விமர்சனமாக எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்