தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இப்போது ரவிமோகன் என பெயரை மாற்றியிருக்கிறார். நடிகர் ஜெயம் ரவியின் சொந்த அண்ணன் மோகன் ராஜா. இவர் ஜெயம் படத்தை டைரக்ட் செய்து தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை மோகன்ராஜாவுக்கு கொடுத்தது.
தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி சம்திங் சம்திங் தனி ஒருவன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை மோகன்ராஜா இயக்கினார். அடுத்து நடிகர் விஜய் நடித்த வேலாயுதம் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் போன்ற வெற்றி படங்களையும் மோகன் ராஜா கொடுத்தார்.
இயக்குனர் மோகன்ராஜா தெலுங்கில் லூசிபர் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்துக்கு பிறகு சில ஆண்டுகளாக மோகன் ராஜா படங்களை இயக்கவில்லை. மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் 2 படத்தை இயக்கும் திட்டமும் நீண்ட நாட்கள் தள்ளிப் போய்விட்டது.
இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் மோகன்ராஜா டைரக்ட் செய்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்கி வரும் 2027ம் ஆண்டில் இந்த படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அனுமன் ஜங்ஷன் என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2001ம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ராஜா. அந்த வகையில் அவர் தனது சினிமா பயணத்தில் 25வது ஆண்டில் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். நடிகர் கார்த்திக்கு இது 30 அல்லது 31வது படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இப்போது மார்ஷல் சர்தார் 2 மற்றும் தெலுங்கு பட இயக்குனர் இயக்கும் ஒரு படம் மொத்தம் 3 படங்களில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். பேமிலி எண்டர்டெயின்டர் திரைக்கதையில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் நடிகைகள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் திரு இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மோகன் ராஜா வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் ஏற்கனவே வெளியாகி உள்ளது.





