- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் இல்லத்துக்கு சென்று திரும்பிய மாஸ்டர் ராகவா லாரன்ஸ், அதிரடியாக வெளியிட்ட வீடியோ - அவரது...

விஜயகாந்த் இல்லத்துக்கு சென்று திரும்பிய மாஸ்டர் ராகவா லாரன்ஸ், அதிரடியாக வெளியிட்ட வீடியோ – அவரது அறிவிப்பை பார்த்து அசந்து போன ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தில், எஸ்ஜே சூர்யாவும் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

முதலில் டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த ராகவா லாரன்ஸ், அமர்க்களம் படம் மூலம் நடனக்காட்சி ஒன்றில் அறிமுகமானார். தொடர்ந்து சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த அவருக்கு முனி படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக அவர் நடித்த காஞ்சனா படங்கள் முன்னணி நடிகராக்கியது.

- Advertisement -

சமீபத்தில் அவரது தாயாருடன் விஜயகாந்த் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திய அவர், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கும் நேரில் சென்றிருக்கிறார். அங்கு பிரேமலதா, சண்முக பாண்டியன், விஜயபிரபாகரன், சுதீஷ் ஆகியோரை சந்தித்து பேசிவிட்டு திரும்பியிருக்கிறார்.

இதற்கிடையே வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். அதில் அவர் கூறியிருப்பதாவது, விஜயகாந்த் வீட்டுக்குச் சென்ற போது, அங்கிருந்த விஜயகாந்த் குடும்பம் சார்ந்த ஒருவர், சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கிறார். நீங்கள் எல்லாம் அவரை பார்த்துக்கணும் என்று சொன்னார். அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்து விட்டது.

- Advertisement -

ஏனென்றால் சினிமாத்துறையில் பலரது வளர்ச்சிக்கு உதவியவர் கேப்டன். பல தர்ம காரியங்களை செய்தவர். அவரது குடும்பத்துக்கு, அவரது மகன்களுக்கு விஜயகாந்த் மீது நான் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடாக ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதில் தோன்றிக்கொண்டே இருக்கிறது.

இப்போது அவர் நடித்துவரும் படத்தில், படக்குழுவினர் விரும்பினால் டான்ஸ், பைட், அல்லது ஏதாவது ஒரு சீனில் கெஸ்ட் ரோல் பண்ணித்தர நான் தயாராக இருக்கிறேன். அந்த படத்துக்கு ஏதாவது ஒரு நல்ல ஓபனிங் கிடைக்க பப்ளிசிட்டி தர வேண்டும். இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் இருந்தாலும், அப்படி யாராவது சொன்னால் சண்முகபாண்டியனுடன் இணைந்து அந்த படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். அரசியலில் ஆர்வமாக இருக்கும் விஜயபிரபாகரனுக்கு என் வாழ்த்துகள் என்று அந்த வீடியோவில் ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்