- Advertisement -
Homeபொழுதுபோக்குவாங்கடா ஒரு கை பார்த்திடலாம்- நடு ரோட்டில் கத்தியை காட்டி சவால் விட்ட ரகுவரன், டெரரான...

வாங்கடா ஒரு கை பார்த்திடலாம்- நடு ரோட்டில் கத்தியை காட்டி சவால் விட்ட ரகுவரன், டெரரான சம்பவமா இருக்கே

- Advertisement -

பொதுவாக வில்லன் என்றாலே மிகப் பெரிய பயமுறுத்தும் உருவத்துடனும் மீசை, தாடியுடன் வலம் வரும் பல டெம்ப்ளேட்டுகள் தமிழ் சினிமாவில் உண்டு. ஆனால் இந்த டெம்ப்ளேட்டுகளை எல்லாம் உடைத்து எரிந்தவர் ரகுவரன். உயரமான ஒல்லியான உடலமைப்பு, மிரட்டல் இல்லாத பார்வை என வில்லத்தனத்திற்கு எந்த வித சம்பந்தமும் இல்லாத ஆள்தான் ரகுவரன். ஆனால் தனது மிரட்டலான நடிப்பின் மூலமாகவே வில்லத்தனத்தை காட்டி ரசிகர்களை மிரள்வைத்தவர் ரகுவரன்.

“மனிதன்”, “புரியாத புதிர்”, “ஷிவா”, “காதலன்”, “பாட்ஷா”, “முதல்வன்” போன்ற பல திரைப்படங்களில் மிரட்டலான வில்லனாக வலம் வந்த ரகுவரன், “அஞ்சலி”, “யாரடி நீ மோகினி” போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

இவ்வாறு தமிழ் சினிமா ரசிகர்களின் மிகவும் விருப்பத்திற்குரிய நடிகராக திகழ்ந்த ரகுவரன், கடந்த 2008 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் நம்முடன் இல்லை என்றாலும் அவரது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் நினைவில் எப்போதும் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ரகுவரனின் சகோதரர் ஒருவர் ஒரு யூட்யூப் சேன்னலுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ரகுவரன் நடு ரோட்டில் கத்தியை வைத்து சண்டைக்கு இழுத்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

- Advertisement -

ஒரு முறை ரகுவரன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை இன்னொரு கார் ஓவர் டேக் செய்துள்ளது. அப்போது அந்த காரில் இருந்தவர்கள் ரகுவரனை எதற்கோ திட்டிவிட்டு வேகமாக காரை ஓட்டி சென்றுவிட்டார்களாம். உடனே ரகுவரன் அந்த காரை விரட்டிச் சென்று அந்த காரின் குறுக்கே தனது காரை நிறுத்தி வழி மறித்தாராம்.

காரில் இருந்து இறங்கிய ரகுவரன், கார் பேன்னட்டில் ஏறி அமர்ந்துகொண்டு தனது பின்னால் இருந்து ஒரு சின்ன கத்தியை உருவி, “எத்தன பேரா இருந்தாலும் பரவாயில்லை, வாங்கடா பாத்துக்கலாம்” என்று சண்டை இழுத்துள்ளார். இதனை அங்கிருந்த மக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்களாம். ஆனால் இங்கே ஏதோ ஷூட்டிங் நடப்பதாக அவர்கள் நினைத்துக்கொண்டார்களாம்.

அப்போது யதார்த்தமாக அந்த பக்கம் வந்த நாசர், இதனை பார்த்துள்ளார். உடனே தனது காரை நிறுத்தி ரகுவரனை சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு போய்விட்டாராம்.

 

- Advertisement -

சற்று முன்