- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதியின் பட டைட்டிலை கையில் எடுக்கிறாரா ராஜமவுலி... அதுவும் மகேஷ் பாபுவை வைத்து எடுக்கப்படும்...

விஜய் சேதுபதியின் பட டைட்டிலை கையில் எடுக்கிறாரா ராஜமவுலி… அதுவும் மகேஷ் பாபுவை வைத்து எடுக்கப்படும் பிரம்மாண்ட திரைப்படத்திற்காக இப்படி ஒரு முடிவா…

- Advertisement -

இந்திய சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குனர்களில் மிக முக்கியமானவர் யார் என்றால், கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம் அது ராஜமௌலி தான் என்று. அந்த அளவுக்கு அவரது திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனதுடன் பிரமிக்கவும் வைத்ததால், அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பாகுபலி திரைப்படத்திற்கு முன்பே அவர் வியத்தகு திரைப்படங்கள் பலவற்றை கொடுத்துள்ளார். உதாரணமாக நாம் நான் ஈ படத்தைக் கூறலாம். அதில், வில்லனை ஒரு ஈ பழிவாங்குவது போன்று கதை எழுதி இருப்பார் ராஜமவுலி. இது கேட்டால் பலருக்கும் சிரிப்பும் ஆச்சரியமும்தான் வரும்.

- Advertisement -

ஆனால் அதை தனது திரைக்கதையின் மூலமும், நவீன தொழில்நுட்பத்தின் மூலமும் சாத்தியப்படுத்தி இருந்தார் இயக்குனர். இதன் பிறகு அவரது கிராப் உயர்ந்து கொண்டே சென்றது. மிக முக்கியமாக பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை கொடுத்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே வசூல் ரீதியாக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டி சாதனை படைத்தது. குறிப்பாக பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்குகளுக்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ்களை வரவழைத்தது. இப்படி ஊர் மெச்சும் இயக்குனராக மாறிய ராஜமௌலி அடுத்ததாக இயக்கிய, ஆர் ஆர் ஆர் திரைப்படமும் வாகை சூடியது.

- Advertisement -

அதில் இடம்பெற்ற நாட்டு நாட்டுப் பாடல் ஆஸ்கர் வரை சென்று உலக சினிமாவுக்கும் அந்த திரைப்படம் பரிச்சயமானது. இப்படியான சூழலில்தான் தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் மெதுவாக ஈடுபட்டு வருகிறார் ராஜமவுலி. இந்த முறை அவரது இயக்கத்தில் நடிப்பது தெலுங்கின் முன்னணி நட்சத்திரமான மகேஷ்பாபு தான்.

அமேசான் காடுகளில் இதனை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். முதல் கட்டமாக தென்னாப்பிரிக்காவில் 30 நாட்கள் சூட்டிங் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதில் கதாநாயகியாக நடிக்கப் போகும் பிரியங்கா சோப்ராவிற்கு 30 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருக்கிறார்கள். இந்த படத்திற்கு ராஜமவுலி மகாராஜா என டைட்டிலை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் இந்திய சினிமா அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்