- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த வயசுலயே இப்படி ஒரு ரோலா, எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் ரிஸ்க் எடுத்து நடிக்கும்...

இந்த வயசுலயே இப்படி ஒரு ரோலா, எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் ரிஸ்க் எடுத்து நடிக்கும் கேரக்டர் இதுதான் – லேட்டஸ்ட் அப்டேட் பார்த்து பெருமூச்சு விட்ட ரசிகர்கள்

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு எதிர்பார்க்கப்பட்ட படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் எடுத்த ஏலியன் படம் என்பதால், வேற லெவலில் இருக்கும் என்பதால் ரசிகர்களின் ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது.

இதற்கிடையே, திடீரென இசையமைப்பாளர் இமான் பேசிய நேர்காணலால், சிவகார்த்திகேயன் மீது பயங்கர சர்ச்சை எழுந்து இப்போது ஓய்ந்திருக்கிறது. மன்சூர் அலிகான் அந்த விஷயத்தை பெரிதுபடுத்தாமல் அமைதியாக இருந்தே அதை விட்டு எளிதாக விலகிவிட்டார் சிவகார்த்திகேயன் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி 171 படத்தில், ரஜினியுடன் அவர் நடிப்பதும் உறுதியானதால், மீண்டும் சந்தோஷமான ஒரு சிவகார்த்திகேயனை ரசிகர்கள் பார்க்கலாம்.

- Advertisement -

இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இந்த படத்தில் வித்யாசமான ஹேர் ஸ்டைலில் இருப்பதால், பொது இடங்களுக்கு வரும்போது தலையில் மங்கி குல்லாவுடன் வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில், இணையத்தில் இந்த படத்தின் ஒரு சீன் லீக் ஆகி வைரலாகி வருகிறது. இதையறிந்த படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. இணையத்தில் லீக்கான அந்த வீடியோவை பார்த்த வகையில், படம் பற்றிய சில விஷயங்கள் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை பார்க்கும் பலரும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

- Advertisement -

இந்த படத்தில் சிவகார்த்தியேகன் மிலிட்ரி அதிகாரியாக வருகிறார். மேலும், சிவகார்த்திகேயன் சாய்பல்லவி இருவரும் கணவன், மனைவியாக நடித்துள்ளனர். இந்த படத்தில் மிக முக்கியமான விஷயமாக அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடித்திருக்கிறார்.

இன்னும் 40 வயதை கூட எட்டாத சிவகார்த்திகேயன், இந்த படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிப்பது, ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஹீரோக்கள் இரட்டை வேடத்தில் நடித்த பல படங்கள் சொதப்பி, தோல்வியில் முடிந்திருக்கின்றன. ஒரு சில படங்கள் மட்டுமே பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. அதனால் இந்த படம் எப்படி இருக்குமோ எனவும் ஒருதரப்பு ரசிகர்கள் பெருமூச்சு விடவும் செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்