- Advertisement -
Homeபொழுதுபோக்கு3 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் - விஜய் நேரில் சந்திப்பு; நடிகர் விஜய் முதல்வரான பிறகு...

3 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் – விஜய் நேரில் சந்திப்பு; நடிகர் விஜய் முதல்வரான பிறகு நிகழ்ந்த முதல் சந்திப்பு!

- Advertisement -

நடிகராக இருந்த விஜய் தமிழக முதல்வர் ஆன பிறகு சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தது வைரலாகி வருகிறது. விஜய் முதல்வரான பிறகு மரியாதை நிமித்தமாக அவரை நேரில் சென்று ரஜினிகாந்த் சந்திக்கவில்லை. சம்பிரதாயத்துக்காக அப்படி சந்திக்க விருப்பமில்லை என்று ரஜினிகாந்த் வெளிப்படையாக கூறியிருந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2023ம் ஆண்டு லியோ மற்றும் ஜெயிலர் படப்பிடிப்பு ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடந்த போது இருவரும் நேரில் சந்தித்து பேசிக் கொண்டனர். அதன்பிறகு நேற்று அனிருத் காவ்யா திருமண வரவேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் விஜய் நேரில் முதல்முறையாக சந்தித்து பேசினர். அருகில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்