- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் ரசிகரை தியேட்டரில் வைத்து தாக்கிய ரஜினி ரசிகர்கள்... செய்வதறியாது தவித்த விஜய் ரசிகர்.. அப்படி...

விஜய் ரசிகரை தியேட்டரில் வைத்து தாக்கிய ரஜினி ரசிகர்கள்… செய்வதறியாது தவித்த விஜய் ரசிகர்.. அப்படி என்ன நடந்தது?

- Advertisement -

தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்வியால் ரஜினிகாந்த்தின் சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆட்டம் கண்டு இருப்பதாக ஒரு பேச்சு சபீபமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் விஜய்யின் படங்கள் வரிசையாக 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைவதால் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் இன்று வெளியாகியிருக்கிறது

பீஸ்ட்டில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க நெல்சனும், தனது நாற்காலி ஆட்டம் காணவில்லை என்பதை நிரூபிக்க ரஜினியும் இந்த படத்தை பயன்படுத்திக்கொள்ள முடிவு எடுத்தனர். அதற்காக மேக்கிங்கில் நெல்சன் தனது பங்குக்கு அசுரத்தனமாக உழைக்க; நடிப்பில் ரஜினிகாந்த் அவ்வாறே பணியாற்றினார்.

- Advertisement -

இன்று காலை 9 மணிக்கு ஜெயிலர் படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் திரையிடப்பட்டது. மொத்தம் 900 ஸ்க்ரீன்களில் ஜெயிலர் திரையிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன் எந்த தமிழ் படத்துக்கு இது நடக்காதது. படத்தை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே திருப்தியுடன் வெளியே வந்தனர். குறிப்பாக முதல் பாதி மிக மிக அட்டகாசமாக இருப்பதாகவும் ஆரம்பத்தில் ஸ்லோவாக இருந்தாலும் போகப்போக பிக்கப் ஆகி விட்டதாகவும் கூறுகின்றனர்.

அதேபோல் இரண்டாவது பாதியில் நெல்சன் திலீப் குமாரின் டார்க் காமெடி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதாகவும் மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோரின் பெர்பார்மன்ஸ் அருமையாக இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். முக்கியமாக ஃப்ரீ கிளைமாக்ஸ் காட்சி மற்றும் வில்லன் விஷயத்தில் நெல்சன் திலீப்குமார் வைத்த ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காதது என்கின்றனர் ரசிகர்கள்.

- Advertisement -

முதல் காட்சி முடிவிலேயே பாசிட்டிவ் விமர்சனம் வந்து விட்டதால் ஆங்காங்கே தென்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் அனைத்தும் தவிடுபொடியாகியிருக்கின்றன. எனவே ஜெயிலர் படம் மெகா ஹிட் என ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஓப்பனாக பதிவிட ஆரம்பித்திருக்கின்றனர்

இந்நிலையில் ட்விட்டரில் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் ஒரு திரையரங்கில் விஜய் ரசிகர் ஒருவர் ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இல்லை எனக் கூறியிருக்கிறார். அதனைக் கேட்ட அருகில் இருந்த ரஜினி ரசிகர்கள் அந்த விஜய் ரசிகரை சகட்டுமேனிக்கு தாக்குகின்றனர். இது தொடர்பான வீடியோ ட்விட்டரில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே ஜெயிலர் படத்துக்கான பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த சூழலில் வெளிவந்த நெகட்டிவ் விமர்சனங்கள் அனைத்தும் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தை மனதில் வைத்து விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே கிளப்பி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை ரஜினி ரசிகர்கள் வைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்