- Advertisement -
Homeபொழுதுபோக்குதை பொங்கல் திருநாளில் ரஜினி ரசிகர்களுக்கு இப்படி ஒரு ஏமாற்றமா? ஏம்பா நியூஸ் எல்லாம் பார்க்கவே...

தை பொங்கல் திருநாளில் ரஜினி ரசிகர்களுக்கு இப்படி ஒரு ஏமாற்றமா? ஏம்பா நியூஸ் எல்லாம் பார்க்கவே மாட்டீங்களா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக நடித்து வெளியான படம் வேட்டையன். தசெ ஞானவேல் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியான இந்த படம் ரூ. 265 கோடி வரை வசூலித்தது. இந்த படத்தில் அமிதாப் பச்சன் ராணா டகுபதி அபிராமி மஞ்சுவாரியார் துஷாரா விஜயன் பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். என்கவுண்டர் மற்றும் கல்வி வியாபாரம் ஆகிய கருத்துகளை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக ரஜினிகாந்த் நடித்திருந்தார். படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

- Advertisement -

இந்த சூழலில் தனது 171வது படம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் சத்யராஜ் அமீர்கான் நாகர்ஜூனா உபேந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இன்னும் 2 மாதங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் முடியும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் வீடு உள்ளது. ரஜினி மீது தீவிர அன்பு கொண்டுள்ள ரஜினி ரசிகர்கள், அவரை சந்திக்க போயஸ் கார்டன் வீடுக்கு வருவது வழக்கம். குறிப்பாக தமிழ் புத்தாண்டு ஆங்கில புத்தாண்டு தீபாவளி பொங்கல் விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷ நாட்களில் தனது வீட்டின் முன் திரளும் மக்களை ரஜினி சில விநாடிகள் சந்திப்பார்.

- Advertisement -

வீட்டு முன் திரண்டிருக்கும் ரசிகர் கூட்டத்தை காண வெளியே வரும் ரஜினிகாந்த், கைகளை ஆட்டி கும்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சில விநாடிகளில் வீட்டுக்குள் சென்று விடுவார். ரஜினியை சில விநாடிகள் நேரில் காணும் அந்த சந்தோஷத்துக்காக மணிக்கணக்கில் ரசிகர்கள் ரஜினி வீட்டுக்கு முன் காத்திருப்பது வழக்கமான ஒன்றுதான்.

இப்போது தாய்லாந்தில் கூலி படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. அதற்காக ரஜினிகாந்த் கடந்த வாரமே தாய்லாந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று தைப் பொங்கல் நாளில் ரஜினியை பார்க்க வழக்கம் போல ரஜினி வீட்டின் முன் ரசிகர்கள் ஏராளமாக திரண்டு விட்டனர். ஆனால் அதன்பிறகுதான் ரஜினி தாய்லாந்து சென்ற விஷயம் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

- Advertisement -

சற்று முன்