- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்க; ரஜினி பட டைரக்டர் அதிரடியாக போட்ட பதிவால்...

இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்க; ரஜினி பட டைரக்டர் அதிரடியாக போட்ட பதிவால் பரபரப்பு – இதுல சூப்பர் ஸ்டாரை ஏம்பா கோர்த்து விடறீங்க?

- Advertisement -

இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக நாடு முழுவதும் பரபரப்பாக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் பாஜக, அதிமுக, பாமக, சமக உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும்; திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன.

தொகுதிகள் வாரியாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு தீவிர பிரச்சாரம் நாடு முழுவதும் நடந்து வருகிறது. தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சீமான் போன்றவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வரும் வேட்டையன் படத்தை தசெ ஞானவேல் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. தற்போது ரஜினி நடித்து வரும் வேட்டையின் படப்பிடிப்பில் ஞானவேல் பிஸியாக உள்ள நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப்பதிவு நாளன்று யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று இயக்குனர் தசெ ஞானவேல் வெளிப்படையாக ஒரு பதிவை செய்திருக்கிறார். இது பலத்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, வாக்குரிமை என்பது, என் உரிமைகளை காத்து உணர்வுகளை புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் சமூக கடமை. வருங்கால தலைமுறைக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தையே மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை .

- Advertisement -

இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கையை அளிக்கின்றன. மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும் காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் திமுக காங்கிரஸ் இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்திய கூட்டணி கட்சிகளின் வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி நான் அறிந்த என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு ஞானவேல் பதிவிட்டு இருக்கிறார்.

ரஜினி ஹீரோவாக நடித்து வரும் வேட்டையன் படத்தின் டைரக்டர் இப்படி ஒரு பதிவை செய்திருப்பது, அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை இது ரஜினி செய்த உள்குத்து வேலையாக இருக்குமோ என்றும் அரசியல்வாதிகள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மேலும் இந்தியா கூட்டணியில் தான் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் கமல்ஹாசனும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்