- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டாரின் அடுத்த திரைப்பட இயக்குனர்கள் லிஸ்ட்டில் இணைந்த தெலுங்கு பிரபலம்... அஜித் பட தயாரிப்பு...

சூப்பர் ஸ்டாரின் அடுத்த திரைப்பட இயக்குனர்கள் லிஸ்ட்டில் இணைந்த தெலுங்கு பிரபலம்… அஜித் பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பாய்ச்சல்…

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியுள்ளார். நாகர்ஜுனா, உபேந்திரா, சோபின் ஷாகிர், சத்யராஜ், சுருதிஹாசன் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜெயிலர் திரைப்படம் வெளியான நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதியே இந்த திரைப்படமும் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஒரு துறைமுகத்தை மையப்படுத்தியும் அதில் நடக்கும் தங்கம் கடத்தலை பற்றியும்தான் இந்த திரைப்படம் சொல்வதாக பலரும் தெரிவிக்கிறார்கள். அண்மையில் இந்த திரைப்படம் வெளியாக 100 நாட்களே இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் கவுண்டவுன் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

- Advertisement -

அதில் ரஜினிகாந்தின் தோற்றம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. லியோ திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் எடுக்கும் படம் என்பதால் கூலி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது தனது அடுத்த திரைப்படமான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த்.

இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் இடம் பெற்ற பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல முக்கிய நட்சத்திரங்களும் படத்தில் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கின்றன. குறிப்பாக தெலுங்கு நடிகர் பாலையாவுக்கு இதில் கேமியோ ரோல் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

இதற்காக அவர் 50 கோடி ரூபாய் சம்பளத்தை பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் மலையாள நடிகர் பகத் பாஸிலும் படத்தில் நடித்திருப்பதாகவும், அவருக்கு வில்லன் கதாபாத்திரம் என்றும் சிலர் கூறுகிறார்கள். அனேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படம் குறித்த பேச்சும் எழுந்துள்ளது. விஜயை வைத்து ஜனநாயகன் எடுத்து வரும் எச் வினோத் மற்றும் வீரதீரசூரன் படத்தை இயக்கிய அருண்குமாரிடம் ரஜினி கதை கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தை தயாரித்த, மைத்திரி மூவிஸ் நிறுவனத்திடம் ரஜினிகாந்த் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தெலுங்கு இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர் நானியை வைத்து, சரிபோத சானிவரம் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்