- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவராஜ்குமாரின் காட்சியை வைக்க ரஜினியிடம் பெர்மிஷன் கேட்ட படக்குழு, ஆனால் ரஜினி செஞ்சதுதான் ஹைலைட், அப்படி...

சிவராஜ்குமாரின் காட்சியை வைக்க ரஜினியிடம் பெர்மிஷன் கேட்ட படக்குழு, ஆனால் ரஜினி செஞ்சதுதான் ஹைலைட், அப்படி என்ன பண்ணார் தெரியுமா?

- Advertisement -

சிவராஜ்குமார் கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர். சமீப காலமாக பேன் இந்தியா என்ற பெயரில் பல்வேறு மொழிகளில் இருக்கும் நடிகர்களை அழைத்து வந்து நடிக்க வைக்கிறார்கள். அந்த வகையில் “ஜெயிலர்” திரைப்படத்தில் சிவராஜ்குமார் நடித்திருக்கிறார். மேலும் தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்திலும் சிவராஜ்குமார் நடித்துள்ளார்.

“ஜெயிலர்” திரைப்படத்தில் சிவராஜ்குமார் கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்ற காட்சி ரசிகர்கள் பலரையும் Goosebumps-ல் ஆழ்த்தியது. சிவராஜ்குமார் மிகவும் மிரட்டலாக தென்பட்டார். “ஜெயிலர்” திரைப்படத்தை பார்த்த பலருமே சிவராஜ்குமாரின் மாஸ் ஆன என்ட்ரி குறித்து பெருவாரியாக பேசி வருகின்றனர்.

மேலும் “ஜெயிலர்” திரைப்படத்தை பார்த்த பலரும் சிவராஜ்குமாருக்கு ரசிகர்களாக ஆகிவிட்டதாகவும் அவர் கன்னடத்தில் நடித்த பல திரைப்படங்களை பார்க்கத் தொடங்கவேண்டும் எனவும் கூறி வருகின்றனர். அந்தளவுக்கு சிவராஜ்குமார் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார்.

இந்த நிலையில் தற்போது “ஜெயிலர்” திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “ஜெயிலர்” திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சிவராஜ்குமாரின் நடிப்பை பார்த்து படக்குழுவினர் மிரண்டுப்போனார்களாம்.

படம் முடிந்து எடிட்டிங் செய்த பிறகு அவர் இடம்பெற்ற காட்சி மிகவும் மாஸ் ஆக வந்திருப்பதாக உணர்ந்த படக்குழுவினர், ரஜினிகாந்திற்கு தொடர்புகொண்டு, “சிவராஜ்குமார் நடித்த காட்சிகள் மாஸ் ஆக இருக்கிறது. உங்களுக்கு ஓகே என்றால் படத்தில் வைத்துக்கொள்ளலாம்” என கேட்டிருக்கிறார்கள். அதற்கு ரஜினிகாந்த், அந்த காட்சியை தான் பார்க்க வேண்டும் என கூறினாராம்.

அப்போது சிவராஜ்குமாரின் நடிப்பை பார்த்த ரஜினிகாந்த் மிரண்டுப்போனாராம். சிவராஜ்குமார் இடம்பெற்ற காட்சிகள் அப்படியே இருக்கட்டும், இது மிகச் சிறப்பாக இருக்கிறது என ரஜினிகாந்த் பாராட்டினாராம்.

சற்று முன்