- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்பு உடனான படம் தள்ளிப் போகிறதா... அடுத்த திட்டத்தை கையில் எடுத்த பார்க்கிங் இயக்குனர்... ஹீரோ...

சிம்பு உடனான படம் தள்ளிப் போகிறதா… அடுத்த திட்டத்தை கையில் எடுத்த பார்க்கிங் இயக்குனர்… ஹீரோ யாருன்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது மோஸ்ட் வான்டெட் இயக்குனராக மாறி இருக்கிறார் ராம்குமார் பாலகிருஷ்ணன். இத்தனைக்கும் இவர் ஒரே ஒரு திரைப்படத்தைதான் இயக்கி இருக்கிறார். அது பார்க்கிங் திரைப்படம். 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில், ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்தனர்.

மனிதனுக்குள் இருக்கும் ஈகோவால் என்ன என்ன பாதிப்பெல்லாம் ஏற்படுகிறது, பிரச்சனை எப்படி எல்லாம் உருவாகிறது, அதனால் ஏற்படும் பின்விளைவுகள் எந்த அளவுக்கு உச்சத்தில் செல்கிறது என்பதை விறுவிறுப்பாக கொடுத்திருந்தார் ராம்குமார் பாலகிருஷ்ணன். சொல்லப்போனால் இது மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் இன்னொரு பரிணாமம் என்று தான் கூற வேண்டும்.

- Advertisement -

ஈகோ என்ற கான்செப்ட்டை மையமாக வைத்து தான் இந்த இரண்டு திரைப்படங்களும் எடுக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் அந்த சமயத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படியான சூழலில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது.

இதில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை பார்க்கிங் தட்டி சென்றது. அதுமட்டுமல்ல சிறந்த திரைக்கதை அமைப்பிற்கான விருதையும் இயக்குனர் ராம் குமார் பாலகிருஷ்ணன் பெற்றார். சிறந்த துணை நடிகருக்கான விருது பார்க்கிங்கில் நடித்த எம் எஸ் பாஸ்கருக்கு கிடைத்தது. இப்படி ஒரே நேரத்தில் மூன்று தேசிய விருதுகளை தட்டிச் சென்றது பார்க்கிங் திரைப்படம்.

- Advertisement -

இதன் மூலம் ராம்குமார் பாலகிருஷ்ணனும் இந்திய சினிமா அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார். இவர் அடுத்ததாக சிலம்பரசன் உடன் ஒரு திரைப்படத்தில் இணைவதாக இருந்தது. ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சந்தானம், கயாடு லோகர் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பட பூஜையும் தொடங்கி சூட்டிங் நெருங்க இருந்த சூழலில் திடீரென அது ஒத்திவைக்கப்பட்டது.

தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த திரைப்படம் கைவிடப்படவில்லை என இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தெளிவுபடுத்தியுள்ளார். அதேசமயம் இதன் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் அவர் இறங்கியுள்ளார். இதன் சூட்டிங் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கும் என்று கூறி இருக்கிறார். இதில் கதாநாயகனாக நடிக்கப்போவது வேறு யாருமல்ல சியான் விக்ரம் தான். ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறிய கதை அவருக்கு பிடித்து விட்டதாகவும், இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்