- Advertisement -
Homeபொழுதுபோக்குதர்பார் படத்திற்கு பிறகு மீண்டும் போலீஸாக நடிக்கும் ரஜினிகாந்த்? அதுவும் எந்த படத்தில் தெரியுமா?

தர்பார் படத்திற்கு பிறகு மீண்டும் போலீஸாக நடிக்கும் ரஜினிகாந்த்? அதுவும் எந்த படத்தில் தெரியுமா?

- Advertisement -

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி செராஃப், சுனில், மோகன் லால், சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இதற்கு முன் நெல்சன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆதலால் “ஜெயிலர்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டிய நிலையில் நெல்சன் தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதே போல் ரஜினிகாந்த் இதற்கு முன்பு நடித்த “அண்ணாத்த” திரைப்படமும் சரியாக போகவில்லை. ஆதலால் “ஜெயிலர்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினிகாந்த் இருக்கிறார். “ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து “லால சலாம்” திரைப்படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.

“லால் சலாம்” திரைப்படத்தை தொடர்ந்து “ஜெய் பீம்” புகழ் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்து மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, ரஜினிகாந்த்-தா.செ.ஞானவேல் கூட்டணியில் அமையும் திரைப்படத்தை குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

அதாவது இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக நடிக்கிறாராம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரத்தில் காவல் நிலைய செட் ஒன்று போடப்படவுள்ளதாம். இவ்வாறு ஒரு தகவலை பிஸ்மி பகிர்ந்துகொண்டுள்ளார். “தர்பார்” திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் காவல் அதிகாரியாக மீண்டும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்