- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் இடையே மோதல் - தன்னிச்சையான...

நடிகர் தனுஷ் விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் இடையே மோதல் – தன்னிச்சையான முடிவை எப்படி எடுக்கலாம் என நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கேள்வி!

- Advertisement -

நடிகர் தனுஷ் இனி புதிய படங்களில் நடிப்பதாக இருந்தால் அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி, கலந்தாலோசிக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், பத்திரிகை செய்தியாக வெளியிட்டது, சினிமா துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது நடிகர் சங்கம் சார்பில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் நடிகர்கள் குறித்த பொது தீர்மானத்தில் நடிகர் தனுஷ் குறித்த தனி தீர்மானமும், பொது தீர்மானமும் எங்களுக்கு அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.

- Advertisement -

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இதுவரை நடிகர் தனுஷ் குறித்து இதுநாள் வரை எந்தவிதமான புகாரும் அளிக்கப்படவில்லை. அவர் மீது எந்தவிதமான புகாரும் நிலுவையில் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இதுகுறித்து இரு தரப்பும் கலந்து பேசி நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் எங்களிடம் எந்தவிதமான கலந்தாலோசனையும் செய்யாமல், சினிமா தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி அதை பத்திரிகை செய்தியாக வெளியிட்டதை தொன்மையான, பாரம்பரியமிக்க தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

- Advertisement -

சினிமா துறையில் இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் போது, தீர்வு காண முற்படும்போது, சினிமாவில் மிக பிரதான பங்காற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை கலந்து ஆலோசிக்காமல், ஆயிரக்கணக்கான நடிகர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் விதமாக வரும் நவம்பர் 1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்திக்கொள்வது என்ற தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது கடும் கண்டனத்துக்குரியது.

அனைத்து தரப்பு திரை தொழிலாளர்களையும் பாதிக்கும் இந்த தீர்மானத்தை, தயாரிப்பாளர் சங்கம் திரும்ப பெற வேண்டும் என நடிகர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி கூறுகையில், இது தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக எடுத்த முடிவு, வழக்கமாக அனைத்து சங்கங்களையும் கலந்தாலோசித்துவிட்டு தான் இந்த மாதிரியான முடிவுகளை எடுப்பார்கள். பல ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்க்கை இதில் அடங்கியிருக்கிறது என்று, கார்த்தி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்