நடிகர் அஜீத்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கிறது. இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். கடந்த மாதம் 20ம் தேதி முதல் அஜர்பைஜானில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்துக்கு பிறகு, நடிகர் அஜீத்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ஒரு ஷெட்யூல் ஷூட்டிங்கை முடித்துவிட்ட நிலையில், 2ம் கட்ட ஷூட்டிங்கில் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு கலந்துக்கொள்ள இருக்கிறார். சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட உள்ளது.
நடிகர் அஜீத்குமார், சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து முன்னிலை நடிகராக உயர்ந்தவர். டாப் ஸ்டார் நடிகர்கள் 4 பேரில் ஒருவராக இருப்பவர். சினிமாவில் யாருடைய ஆதரவும் இல்லாமல் சுயம்புவாக நின்று ஜெயித்த அஜீத்குமார் மீது, ரஜினிக்கு எப்போதுமே தனிப்பிரியம் உண்டு. ஏனெனில் ரஜினியும் அப்படி சினிமா பின்புலம் இல்லாமல் வந்து தமிழ் சினிமாவில் சாதித்தவர்தான்.
விஜய் மீது ரஜினிக்கு துவக்கத்தில் நிறைய அன்பு இருந்தாலும், ஒரு கட்டத்தில் ரஜினிக்கு மீறிய ஒரு வளர்ச்சியை அவர் ரசிகர்கள் மத்தியில் பெற்றது, ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்தான் சூப்பர் ஸ்டார் என்ற விமர்சனத்தை எல்லாம் ரஜினியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதுவும் ரஜினி அரசியலுக்கு வராமல் டிமிக்கி கொடுத்த நிலையில், விஜய் கட்சி துவங்கியது, ரஜினிக்கு அதிக கெட்ட பெயரை தேடித் தந்துள்ளது.
அதனால் விஜய் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் ரஜினிகாந்த், ஆரம்பத்தில் இருந்தே அஜீத்குமார் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டினார். நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். ஏனெனில், அஜீத்குமார் ரஜினி பார்மூலாவில் சினிமாவில் நடிக்கவில்லை. அவரது வழி தனிவழியாக இருந்தது.
அதனால்தான், தனது பில்லா படத்தில் நடிக்க, அஜீத்குமாரை ரஜினி சிபாரிசு செய்தார்.
இந்நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் அஜீத்குமார் நிறைய பேசுவார். வளர்ந்து வந்த அந்த காலகட்டத்தில் நிறைய பத்திரிகை பேட்டிகள் தருவார். அப்போது நிறைய விஷயங்களை வெளிப்படையாக பேசி விமர்சனங்கள், சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வார். அப்போது ரஜினி, அஜீத்குமாருக்கு சொன்ன அட்வைஸ்தான், மீடியாக்களிடம் தொடர்பு வேண்டாம், பேட்டி தந்து பெயரை கெடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் சொல்லும் கருத்து வேறுவிதமாக வந்துவிடும் என்று அட்வைஸ் செய்திருக்கிறார். அதனால்தான், பேட்டிகளை முற்றிலும் தவிர்க்கும் அஜீத்குமார், தனது படத்தின் பிரமோஷன்களில் கலந்துக்கொண்டு பேசுவதையும் முற்றிலும் தவிர்த்து வருகிறார்.





