- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் பட இயக்குனர் விக்ரம் பட இயக்குனர் இருவரில் யாருக்கு வாய்ப்பு? கதை கேட்டு ஓகே...

விஜய் பட இயக்குனர் விக்ரம் பட இயக்குனர் இருவரில் யாருக்கு வாய்ப்பு? கதை கேட்டு ஓகே சொன்ன ரஜினிகாந்த் – விரைவில் அறிவிப்பு வெளியாகுமா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தை முடித்துவிட்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை கேரளா கோழிக்கோடு என பிஸியாக இருந்து வருகிறது.

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வமாக இருந்து வருகிறார். அந்த வகையில் ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு அவர் நடிக்கப் போகும் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது.

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி இப்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை டைரக்ட் செய்து வருகிறார். அதனால் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தையும் சுந்தர் சி இயக்குவதாக ஒரு தகவல் கடந்த வாரத்தில் பரவியது. ஏற்கனவே சுந்தா் சி ரஜினி கூட்டணியில் அருணாசலம் படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.

ஆனால் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை சுந்தர் சி இயக்கவில்லை என்ற உறுதியான தகவல் வெளியான நிலையில், இப்போது ரஜினிகாந்த் 2 இயக்குனர்களிடம் கதை கேட்டிருக்கிறார் என்ற லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. ஜனநாயகன் படத்தை இயக்கி வரும் இயக்குனர் எச் வினோத் மற்றும் சியான் விக்ரம் நடித்த வீரதீர சூரன் 2 படத்தை இயக்கிய அருண்குமார் ஆகிய இருவரிடமும் ரஜினிகாந்த் சமீபத்தில் கதை கேட்டிருக்கிறார்.

- Advertisement -

ஜனநாயகன் படப்பிடிப்புக்காக இயக்குனர் எச் வினோத் கொடைக்கானல் செல்வதற்கு முன்பு இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. ரஜினியை போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்த எச் வினோத் கதை சொல்லியிருக்கிறார். ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கும் இந்த கதை பிடித்திருப்பதால் நிச்சயம் ஓகே என ரஜினி தரப்பில் இருந்து பதில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் சித்தா வீரதீர சூரன் 2 படங்களை இயக்கிய அருண்குமாரிடமும் ரஜினி கதை கேட்டிருக்கிறார். அதனால் இருவரில் யாருக்கு ஓகே சொல்லப் போகிறார் என்பது விரைவில் தெரிய வரும். இயக்குனர் இருவரில் யாராக இருந்தாலும் அந்த படத்தை தயாரிக்கப் போவது ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்