- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி திரைப்படத்தில் அந்த பாலிவுட் பிரபலம் நடிப்பது உறுதி... அப்படின்னா தமிழ் சினிமாவில் முதல் ஆயிரம்...

கூலி திரைப்படத்தில் அந்த பாலிவுட் பிரபலம் நடிப்பது உறுதி… அப்படின்னா தமிழ் சினிமாவில் முதல் ஆயிரம் கோடி அடிக்கும் படம் இதுவாகத்தான் இருக்கும் போலயே….

- Advertisement -

ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஞானவேல் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் நீட் உள்ளிட்ட கல்வி தேர்வு முறை மற்றும் என்கவுண்டர் என இரண்டு விஷயங்களை பேசி இருக்கிறது. குறிப்பாக படத்தில் பகத் பாஸிலின் நடிப்பு நன்றாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

 

- Advertisement -

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

 

- Advertisement -

தங்கக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், சைமன் என்னும் கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா. இதுபோக மலையாள நடிகர் சோபின் சபீர் படத்தில் இருக்கிறார். அவருக்கும் வில்லன் கதாபாத்திரம் தான் என்று கூறப்படுகிறது.

 

இதுபோக சத்யராஜ், ஸ்ருதிஹாசன், கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்டோரும் படத்தில் இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு முதலில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு மாற்றினார் லோகேஷ் கனகராஜ்.

 

அங்குள்ள துறைமுகத்தில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சூட்டிங் முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மூன்று நாட்கள் சிகிச்சையில் இருந்த ரஜினிகாந்த், தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

 

15 ஆம் தேதிக்கு மேல் அவர் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கூலி திரைப்படத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறாரா அல்லது வேறு ஏதும் ரோலா என்பது மட்டும் இன்னும் தெரியவில்லை. தெலுங்கு கன்னடத்தைத் தொடர்ந்து இந்தி திரையுலகிலும் முக்கியமான நட்சத்திரம் கூலி திரைப்படத்தில் இடம் பெற்றிருப்பதால் நிச்சயம் இது ஆயிரம் கோடி ரூபாய் வசூலை அள்ளும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

 

- Advertisement -

சற்று முன்