- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென தள்ளிப் போகும் ரஜினியின் கூலி பட ஷூட்டிங்... இதுதான் காரணமா லோகேஷ் கனகராஜ்?...

திடீரென தள்ளிப் போகும் ரஜினியின் கூலி பட ஷூட்டிங்… இதுதான் காரணமா லோகேஷ் கனகராஜ்?…

- Advertisement -

ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக வேட்டையன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ஜெய் பீம் திரைப்படத்தை எடுத்து தமிழ்நாட்டை உலுக்கிய ஞானவேல் தான் இதன் இயக்குனர். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

 

இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காவல்துறையை பின்னணியாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து பல்வேறு இடங்களில் இதன் சூட்டிங் நடைபெற்றது.

 

தற்போது படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், அக்டோபர் மாதம் வேட்டையன் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினிகாந்த் இணைந்திருக்கிறார். இந்த படத்திற்கு கூலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் மெட்டு கட்டுகிறார். இதன் அறிவிப்பு வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த்க்கு நெகட்டிவ் கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் படத்தில் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

ரஜினியும் சத்யராஜும் இணைந்து மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் மிகப்பெரிய இடைவேளைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். படத்தில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் நடிப்பதாக கூறப்படுகிறது. விருமாண்டி பட நாயகி அபிராமியும் இதில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த நிலையில் கூலி பட படப்பிடிப்பு நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் வேட்டையன் படத்தில் டப்பிங் பணிகள் மீதம் இருப்பதால் அந்தப் பணிகளில் ரஜினிகாந்த் கவனம் செலுத்தி வருகிறார். இதே போல் இறுதி கட்ட கதை ஆலோசனை உள்ளிட்ட வேலைகளில் லோகேஷ் பிஸியாக இருக்கிறார். பீரியட் ஆக்சன் ஃபிலிம் ஆக இது உருவாகிறதாம். இதனால் கூலிப்பட ஷுட்டிங் அடுத்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்