- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவரே… இது வேற லெவல் சம்பவமாக இருக்குதே? சென்னையில் ரஜினி திரைப்பட விழா - என்னென்ன...

தலைவரே… இது வேற லெவல் சம்பவமாக இருக்குதே? சென்னையில் ரஜினி திரைப்பட விழா – என்னென்ன படங்கள் போடறாங்க தெரியுமா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் என்றாலே கொல மாஸ்தான். என்னதான் அவருக்கு 73 வயது என்றாலும், இன்னும் அவரது வேகமும், ஸ்டைலும் சிறிதும் குறையவில்லை என்பதை ஜெயிலர் படத்தில் நிரூபித்து காட்டினார். இப்போது வேட்டையன் படத்தையும் ரசிகர்கள் வெகு ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வேற லெவல் சம்பவங்களாக அவரது படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்த காத்திருக்கின்றன.

ஆனால் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படம்தான் எடுபடவில்லை. சென்டிமென்டாகவே ரஜினிக்கு கேமியோ ரோல் படங்கள் சரியாக வெற்றியை தருவதில்லை. வள்ளி, குசேலன், லால் சலாம் என அவருக்கு கெஸ்ட் ரோல் அப்பியரன்ஸ் என்பது, பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெறுவதே இல்லை. இனி கேமியோ ரோல் ரஜினி முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

அதே வேளையில் சமீபமாக பிரபல நடிகர்கள் நடித்த பழைய திரைப்படங்கள் அதாவது 10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகளுக்கு முன்வந்த படங்களை தியேட்டர்களில் ரி ரிலீஸ் செய்கின்றனர். அந்த படங்களை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் சிலம்பரசன், திரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன நிலையில், ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

அதே போல் புதுப்பேட்டை, வடசென்னை, 3, முத்து, ஆளவந்தான் போன்ற பல படங்களும் ரி ரிலீஸ் செய்யப்பட்டன. விஜய் நடித்த கில்லி படமும் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படி பழைய படங்கள், ஹிட் படங்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு வரும்போது, அந்த படங்களை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எம்ஜிஆர், சிவாஜி படங்கள் படகோட்டி, தங்கப்பதக்கம், எங்கள் வீட்டுப்பிள்ளை, கர்ணன் போன்றவை இப்படி அடிக்கடி ரி ரீலீஸ் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

- Advertisement -

இப்போது ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளிவந்திருக்கிறது. அதாவது சென்னையில் ரஜினி திரைப்பட விழா நடக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கவுரவிக்கும் விதமாக ரஜினிசியன் என்ற பெயரில் இந்த திரைப்பட விழா நடத்தப்படுகிறது. பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் இந்த விழாவை ஏற்பாடு செய்து நடத்துகின்றன.

சென்னையில் உள்ள சத்யம் தியேட்டர், எஸ்கேப், பிவிஆர், பிளாசோ, லக்ஸ் ஆகிய தியேட்டர்களில் ரஜினிகாந்த் நடித்த படங்களான காலா, பாபா, இந்திரன் 2ம் பாகம் 2.O, சிவாஜி, முத்து, தர்பார் ஆகிய 6 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த படங்களை ரசிகர்கள், தியேட்டர்களில் பார்க்க முன்பதிவு செய்துக்கொள்ளலாம். கட்டண சலுகையும் தரப்படுகிறது. அடுத்து முரட்டுக்காளை, மூன்று முகம், முள்ளும் மலரும், நல்லவனுக்கு நல்லவன், வேலைக்காரன் போன்ற படங்களும் இதுபோல் ரி ரிலீஸ் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

- Advertisement -

சற்று முன்