நடிகர் ரஜினிகாந்த், இப்போது தனது 170வது படம் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டைரக்டர் தசெ ஞானவேல் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில், ரானா ரகுபதி, கேமியோ ரோலில் அமிதாபச்சன், மஞ்சு வாரியார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று துவங்கும் என்று கூறப்படுகிறது. டைரக்டர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்யும் இந்த படத்தில், மாஸ்டர் ராகவா லாரன்ஸ், இந்தி நடிகர் ரன்வீர் கபூர் மற்றும் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சோபனா உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு கழுகு அல்லது ஈகிள் என்று பெயர் வைக்கப்படும் என்று முதலில் கூறப்பட்டது. ரஜினி படத்தின் பெயரிலேயே டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பெரிய மாஸ் காட்டுவார் என்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கழுகு என்பது அவர் ஏற்கனவே நடித்த பழைய படத்தின் பெயர் தானே என்று ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.
இந்நிலையில், ரஜினி 171 படத்துக்கு கூலி என பெயரிட்டப்பட்டுள்ளது. நேற்று அதிகாரபூர்வமாக கூலி டைட்டில் டீசர் வெளியானது இதில் கருப்பு வெள்ளையில், தங்க நகைகள் நிறைந்துள்ள பகுதியில் ரஜினிகாந்த் சண்டையிடும் காட்சியுடன் இந்த டீசர் வெளியாகி உள்ளது. டீசரை பார்த்த ரஜினி ரசிகர்கள், கொண்டாடி வருகின்றனர்.
அதே நேரத்தில், படத்தின் டைட்டிலை வைத்து நெட்டிசன்கள், டைரக்டர் லோகேஷ் கனகராஜை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். ஏனெனில் நடிகர் சரத்குமார், மீனா ஜோடியாக நடித்த கூலி என்ற படம் பி வாசு டைரக்ஷனில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இப்படி சரத்குமார் நடித்த படத்தின் பழைய டைட்டிலை காப்பியடித்ததை சுட்டிக் காட்டி கிண்டலடித்துள்ளனர். படத்தில் டைட்டில் கூட காப்பிதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க 150 கோடி முதல் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். 5000 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியாக இருக்கிறார். 2 கோடி, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யு கார்களில் வலம் வருகிறார். அவர் நடிக்கும் படத்துக்கு பெயர் கூலியா? ரசிகர்கள் காதில் இப்படியா பூ சுற்றுவீர்கள் என்று நெட்டிசன்கள், டைரக்டர் லோகேஷ் கனகராஜை கண்டபடி கலாய்த்து திட்டி வருகின்றனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





