- Advertisement -
Homeபொழுதுபோக்கு2024ம் ஆண்டு ஜனவரி 22ல் அயோத்தியில் ராமர்கோவில் திறப்பு விழா; நடிகர், நடிகையர் யாருக்கெல்லாம் அழைப்பு...

2024ம் ஆண்டு ஜனவரி 22ல் அயோத்தியில் ராமர்கோவில் திறப்பு விழா; நடிகர், நடிகையர் யாருக்கெல்லாம் அழைப்பு வந்திருக்குன்னு தெரியுமா? – அட இவரும் லிஸ்ட்ல வந்துட்டாரா

- Advertisement -

இந்திய அரசியல் வரலாற்றில், சினிமாத்துறைக்கும் முக்கிய பங்குண்டு. ஏனெனில் சுதந்திர கால போராட்டத்தில் திரைப்படங்கள் வாயிலாகவும், திரைக்கலைஞர்கள் மூலமாகவும் தேச பக்தியை மக்கள் மத்தியில் பரவ செய்திருக்கின்றனர். நாடகங்களை அரங்கேற்றம் செய்து, சுதந்திர விழிப்புணர்வு எழுச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றனர்.

அதனால் ஊடகத்துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திரைப்பட கலைஞர்களுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அதுவும் இந்துத்துவா உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறந்த திரைப்படங்களை தரும் திரைக்கலைஞர்களும், மக்கள் மத்தியில் புகழ்பெற்ற, செல்வாக்கு மிக்க கலைஞர்களும் அரசு விழாக்களில், முக்கிய விழாக்களில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க முறைப்படி நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அதன்படி 21ம் தேதிக்கு முன்பாக வந்துவிட்டால் தேவையான வசதிகளை எளிதாக பெறலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடிகர், நடிகைகளுக்கு அனுப்பபட்டுள்ள ராமர்கோவில் திறப்புவிழா அழைப்பிதழில், நீண்ட போராட்டத்துக்கு பிறகு ஸ்ரீ ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணி நடந்துள்ளது. வரும் ஜனவரி 22ம் தேதி, கருவறையில் ராம்லாலாவின் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரான் பிரதிஷ்டையை காணவும், வரலாற்று சிறப்பு மிக்க அந்த நாளில் நீங்கள் அயோத்தியில் இருக்க வேண்டும் என்பது எங்களது வலுவான விருப்பம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த விழாவில் பங்கேற்பதற்காக பாலிவுட் நடிகர், நடிகையர் என அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், அனுபம் கெர், மாதுரி தீக்‌ஷித், டைரக்டர் ராஜ்குமார் ஹிராணி, சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி மற்றும் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், தனுஷ், காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். இன்னும் இந்தி தெற்கு, பஞ்சாப், வங்காளம் மொழி சார்ந்த திரைத்துறையினரும் இதில் அழைக்கப்பட உள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைக்கப்பட்டுள்ளார். அதையடுத்து நடிகர் தனுஷ் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்ற கோணத்தில் அவருக்கு மரியாதை தரும் விதமாக அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இன்றைய சூழலில் அவர் ரஜினி மகள் ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்து வாழ்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்