- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக வெற்றிக் கழகம் அரசியல் மாநாட்டில் தலைவர் விஜய் பாஜக, திமுக கட்சிகளை தாக்கிப் பேசிய...

தமிழக வெற்றிக் கழகம் அரசியல் மாநாட்டில் தலைவர் விஜய் பாஜக, திமுக கட்சிகளை தாக்கிப் பேசிய தலைவர் விஜய் – முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை கிராமத்தில் நேற்று முன்தினம் ஞாயிறு அன்று பிரமாண்டமாக நடந்தது. கடந்த 2 நாட்களாக அந்த மாநாட்டில் விஜய் பேசியதுதான் மக்கள் மத்தியில், அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஒரு தரப்பினர் விஜயின் ஆவேச அதிரடி பேச்சை பாராட்டினாலும், ஒரு சிலர் அதை கலாய்த்தும் கிண்டலும் செய்தும் வருகின்றனர். குறிப்பாக ஒரு சிலர் கத்தி படத்தில் விஜய் நடித்த கிளைமேக்ஸ் காட்சியின் மீதி வசனங்களை மேடையில் பேசி விட்டார் என்கின்றனர். இன்னும் ஒரு சிலர், மாநாட்டு மேடை என்பதை மறந்து விட்டு, சூட்டிங் ஸ்பாட் என்று நினைத்து விஜய் வசனங்களை பேசி விட்டார் என்றும் நக்கலாக கூறுகின்றனர்.

- Advertisement -

இன்னும் ஒரு தரப்பினர் யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களை எல்லாம் மனப்பாடமாக வந்து இங்கு ஒப்பித்து விட்டு சென்று விட்டார். மிகச் சிறந்த ஞாபக சக்தி கொண்டவர் விஜய் என்றும் கிண்டலடித்துள்ளனர். அதே நேரத்தில் விஜயின் ஒளிவு மறைவட்ட நேர்மையான பேச்சு நிச்சயமாக அவருக்கு தமிழக மக்கள் மத்தியில் கணிசமான ஆதரவைப் பெற்றுத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் கூறுகின்றனர்.

விஜயின் அரசியல் பேச்சுக்கு எதிர் விமர்சனம் செய்யும் பலரும் திமுக மற்றும் பாஜக கட்சி சார்ந்தவர்களாக தான் இருப்பார்கள். பொதுமக்கள் தரப்பில், நடுநிலையாளர்கள் மத்தியில் விஜயின் அரசியல் பேச்சுக்கு எந்தவிதமான எதிர்மறை விமர்சனமும் இல்லை என்றும் ஒரு பரவலான பேச்சு இருந்து வருகிறது.அதிமுக திமுக இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நிச்சயமாக தமிழக அரசியலில் ஒரு மாற்றம் வந்தாக வேண்டும். அதற்கான சூழ்நிலை இப்பொழுது உருவாகி விட்டது.

- Advertisement -

புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அடுத்து கேப்டன் விஜயகாந்த் என்ற வரிசையில் நடிகர் விஜய் நிச்சயமாக மக்களின் அபரிமிதமான வரவேற்பு பெற்ற ஒரு அரசியல் தலைவராக பிற்காலத்தில் மாறுவார் என்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் கூறியதாவது, விஜய் நடத்திய மாநாட்டில் அவர் பேசியதில் சில விஷயங்கள் மகிழ்ச்சி தருகிறது. சில வாசகங்கள் மகிழ்ச்சி தரவில்லை. அவர் கட்சி தொடங்கியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்.

தமிழக அரசியலில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை தேர்தல் தான் முடிவு செய்யும். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பதை இப்போது எப்படி சொல்ல முடியும். ஒரு காலத்தில் மத்தியில் தனிக்கட்சிதான் ஆட்சி செய்ய வேண்டும் என்றுதான் இருந்தது. 1996க்கு பிறகு பல கட்சிகள் ஆட்சி செய்கிறது. சாத்தியமில்லாதது எல்லாம் ஒரு காலத்தில் சாத்தியமாகலாம். எனவே இதுகுறித்து போக போகத்தான் சொல்ல முடியும். பாசிசம், பாயாசம் என்று விஜய் பேசியது சினிமா வசனம் போல்தான் தெரிகிறது. சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ப. சிதம்பரம் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்