தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தை ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா டைரக்ட் செய்து இருந்தார். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணா, நிரோஷா, தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தஇந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்தால் அந்த படம் தேறாது என்ற சென்டிமென்டை இந்த படமும் நிரூபிக்கும் வகையில் அமைந்தது. ஏனெனில் 30 ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த வள்ளி படம் ஓடவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடித்த குசேலன் படமும் ஓடவில்லை. அதன் தொடர்ச்சியாக இப்போது வெளிவந்த லால் சலாம்படமும் ஓடவில்லை. எனவே ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்தால் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறாது என்பது, தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சென்டிமென்டாக இருந்து வருகிறது.
இதற்கிடையே, லால் சலாம் படம் மிகப்பெரிய தோல்வி அடைந்த நிலையில், படத்தை சரியான முறையில், மக்களிடம் கொண்டு சேர்க்காத, சரியாக விளம்பரம், பிரமோ செய்யாத லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம்தான் இந்த தோல்விக்கு காரணம் என்று, அபாண்டமாக பழியை தூக்கி லைகா நிறுவனம் மீது போட்டார் டைரக்டர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
ஆனால் ரசிகர்கள் இவர் சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தனர். ஏனெனில் மஞ்சும்மெல் பாய்ஸ், ஆடுஜீவிதம், பிரேமலு, பிரம்மயுகம் போன்ற மலையாள படங்கள் யார் நடிகர் என்றே தெரியாமல், தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாட்டமாக வரவேற்றனர். படம் பார்த்த ரசிகர்கள் மூலமாகவே அந்த படங்களுக்கு பிரமோ கிடைத்தது. அந்த படங்கள் 100 கோடி, 200 கோடி என்று வசூலில் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், லைகா ப்ரொடக்சன்ஸ் என்ற கார்பரேட் தயாரிப்பு நிறுவனம் என மூன்று பெரிய நட்சத்திர கூட்டணி இருந்தும், இந்த படம் தோற்றுப் போனதுக்கு முக்கிய காரணம் டைரக்டர் ஐஸ்வர்யா இயக்கிய படத்தை டாக்குமெண்ட்ரி படம் போல உருவாக்கியதுதான். ஏற்கனவே இவர் 3 என்ற படத்தை இயக்கி பிளாப் ஆனது. அதையடுத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கி, அதுவும் பிளாப் ஆனது.
இப்படி படத்தை இயக்கத் தெரியாமல் இயக்கிவிட்டு, கடைசியில் லைகா தயாரிப்பு நிறுவனம் மீது பழி போட்டதால், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பயங்கர அப்செட் ஆகியுள்ளார். அத்துடன் இப்போது ரஜினி நடிப்பில் உருவாகிவிடும் வேட்டையன் படத்தையும் லைகா நிறுவனம்தான் தயாரிக்கிறது. அங்கும் ஏதோ ரஜினிக்கும் அந்த நிறுவனத்துக்கும் இடையிலான பஞ்சாயத்து நடந்துள்ளதால், ரஜினிகாந்த் பயங்கரமான ஒரு அப் செட்டில் இருந்து வருகிறார்.





