- Advertisement -
Homeபொழுதுபோக்குதுப்பாக்கி படத்தில் நடந்த அந்த விஷயம், இந்த படத்திலும் நடந்தாகணும், வில்லனுக்கு செக் வைத்த...

துப்பாக்கி படத்தில் நடந்த அந்த விஷயம், இந்த படத்திலும் நடந்தாகணும், வில்லனுக்கு செக் வைத்த டைரக்டர் முருகதாஸ் – சிவகார்த்திகேயன் தாக்கு பிடிப்பாரா?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த படங்களில் அவருக்கு மிகப்பெரிய திருப்புனையாக அமைந்த படங்களில் ஒன்றுதான் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய இந்த படம் நடிகர் விஜய்க்கு மாஸ் ஹிட் தந்த படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜெகதீஷ் என்ற கேரக்டரில் விஜய் ராணுவ மேஜராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது டைரக்டர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் கன்னட நடிகை ருக்மணி வசந்த் இணைந்து நடிக்கும் சிங்க நடை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயனும், ஏ ஆர் முருகதாஸ் மிக கடினமாக உழைத்து இந்த படத்தை உருவாக்கி வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு சில படங்கள் சரியாக ஓடவில்லை. குறிப்பாக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அயலான் படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதனால் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்துள்ள இந்த படம், தன்னுடைய கேரியரில் மீண்டும் டாக்டர், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்கள் போல ஒரு மாஸ் ஹிட் படமாக இருக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் எதிர்பார்க்கிறார்.

அதே போல டைரக்டர் ஏ.ஆர் முருகதாஸும், இந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக எதிர்பார்க்கிறார். ஏனெனில் அவர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படத்துக்கு பிறகு கடந்த ஏழு ஆண்டுகளாக எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் படம் மூலமாக தான் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

- Advertisement -

அதனால் இந்த படத்தை நிச்சயமாக பெரிய வெற்றி படமாக தர வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடித்துவரும் எஸ்கே 23 என்ற இந்த படத்துக்கு சிங்க நடை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த மாத இறுதிக்குள் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் வித்யுல் ஜம்வால் கூறுகையில், துப்பாக்கி படத்தில் விஜய்க்கு போட்டியாக வில்லனாக எப்படி ஒரு மேஜிக் செய்தீர்களோ, அதே போல் இந்த படத்திலும் நீங்கள் அந்த மேஜிக்கை செய்ய வேண்டும் என்று டைரக்டர் ஏ ஆர் முருகதாஸ் கூறியிருக்கிறார். ஏனெனில் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக ஸ்லீப்பர்ஸ் செல் தீவிரவாதியாக நடித்திருப்பார். அந்த படத்தில் அவரது நடிப்பு மிரட்டலாக இருக்கும். அதே போல் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் இந்த படத்திலும் மிரட்டலான ஒரு நடிப்பில் மேஜிக் செய்து காட்ட வேண்டும் என்று ஏஆர் முருகதாஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்