- Advertisement -
Homeபொழுதுபோக்குஆரம்பிக்கலாங்களா... சூப்பர் ஸ்டாரோட பஞ்ச் ரெடி... பிரம்மாண்டமாய் நடக்கப்போகுது ஜெயிலர் பட இசை வெளியீட்டு...

ஆரம்பிக்கலாங்களா… சூப்பர் ஸ்டாரோட பஞ்ச் ரெடி… பிரம்மாண்டமாய் நடக்கப்போகுது ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா…

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் என்றால் ரசிகர்கள் அதனை திருவிழா போல் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு சூப்பர் ஸ்டார் படத்தின் முதல் காட்சியும் ஒவ்வொரு கதை சொல்ல, படத்திற்கான நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் தோன்றி பேசுவது ரசிகர்களுக்கு எல்லையில்லா உற்சாகத்தை கொடுக்கும். படத்தின் வெற்றி விழா அல்லது இசை வெளியீட்டு விழா என எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, ரஜினிகாந்தின் பேச்சை கேட்பதற்கான ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கும். இப்படி இருக்க தற்போது ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் படம் வெளிவந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. சிறுத்தை சிவா இயக்கிய அந்த திரைப்படம் தோல்வியை தழுவ, டாக்டர் பட இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்தார் ரஜினிகாந்த். ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

- Advertisement -

ஜெயிலரில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட பிரபலம் சிவராஜ்குமார்,பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷெரப், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட பல மொழிகளை சார்ந்த பிரபலங்களும் இதில் இணைந்து நடித்துள்ளனர். ரஜினியை வைத்து முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக ஜெயிலரை, நெல்சன் உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் ஜெயிலரிலிருந்து வெளியான காவாலையா திரைப்பட பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. தமன்னாவின் எடுப்பான நடன அசைவுகளாலும், கிளாமரான ஆட்டத்தினாலும் சொக்கி போன ரசிகர்கள், காவாலையா பாட்டிற்கு பெரும் வரவேற்பை கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் டைகர்கா ஹுக்கும் பாடல் வெளியானது. சர்ச்சையான வரிகளுடன் தெறிக்கும் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாய் அமைந்துள்ளது.

- Advertisement -

ஜெயிலர் திரைப்படத்திற்காக வேற லெவலில் இசையமைத்திற்கும் அனிருத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தப்பட குழு முடிவு செய்துள்ளது. இதற்காக நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாத இறுதியில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதில் ரஜினிகாந்த் உட்பட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேசும் தருணத்திற்காக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்