- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத் கண்டிசன் இது, வெற்றிமாறன் ஸ்டைல் அது, இவங்க ரெண்டு பேரும் இணைகிற படம் வில்லங்கம்...

அஜீத் கண்டிசன் இது, வெற்றிமாறன் ஸ்டைல் அது, இவங்க ரெண்டு பேரும் இணைகிற படம் வில்லங்கம் இல்லாம முடியுமா? – இப்பவே ஸ்டார்ட் ஆயிடுச்சு சர்சை

- Advertisement -

விடாமுயற்சி படத்துக்கு பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் படத்தில் அஜீத்குமார் நடிப்பது மிக உறுதியாக முடிவாகி விட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் ஒரு படத்திலும் அஜீத் நடிக்கிறார். இரண்டுமே வெவ்வேறு படங்கள்தான். ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பதிலாக, வெற்றிமாறன் அந்த படத்தை இயக்கவில்லை. அஜீத் நடிப்பில் இரண்டு படங்களும் தனித்தனியாக வருகின்றன என்பதுதான் உண்மை.

அஜீத்குமார் ஒரு கமர்ஷியல் நடிகர். கோடி கோடியாய் வசூலை குவிக்கிற ஒரு முன்னணி டாப் ஸ்டார் நடிகராக தமிழ் சினிமாவில் இருக்கிறார். ரஜினி, கமல், விஜய் வரிசையில் மற்றும் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக தான் அஜீத் இகுருந்து வருகிறார். அப்படி இருக்கையில், வெற்றிமாறன் போன்ற ஒரு இயக்குநரின் படத்தில் அஜீத் நடிப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில், வெற்றிமாறன் ஒரு படைப்பிலக்கிய படைப்பாளி. ஒரு சிறுகதையோ, நாவலோ ஒரு தீப்பொறி போன்று அவர் மனதில் தோன்றும் அந்த விஷயமே, ஒரு திரைப்படமாக உருவாகும். அப்படித்தான் அசுரன், ஆடுகளம் போன்ற படங்கள் உருவானது. அவர் செதுக்கி செதுக்கி உருவாக்கும் அந்த கேரக்டர்கள், அந்த கேரக்டரில் நடித்த நடிகருக்கு எப்போதும் ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

வெற்றிமாறனை பொருத்த வரை, படப்பிடிப்பை தொடர்ந்து மாதக்கணக்கில் இடைவெளியின்றி நடத்துவார். நிறைய காட்சிகளை எடுத்து தள்ளுவார். எடுத்த காட்சிகளை திரும்ப போட்டு பார்ப்பார். அது பிடிக்காத பட்சத்தில் புதிதாக எடுப்பார். இன்னும் கூடுதலாக அது சார்ந்த காட்சிகளை புதிதாக எடுப்பார். கதையில் புதிய விஷயங்களை சேர்ப்பார். இப்படி அவர் எந்த வரைமுறையும் இன்று, தனக்கு பிடித்தமான முறையில், திருப்தியான தனது படம் உருவாகும் வரை, அவர் இயக்குவதை நிறுத்த மாட்டார். இதுதான் வெற்றிமாறனின் ஸ்டைலாக இருக்கிறது.

- Advertisement -

ஆனால் அஜீத்தை பொருத்த வரை குறிப்பிட்ட நாட்கள் கால்ஷீட். அதற்குள் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துவிட வேண்டும். அவரை உடல் ரீதியாக, மனம் ரீதியாக பாதிக்கும் விதமாக ஷூட்டிங் நடத்த அவர் அனுமதிப்பதில்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், படத்துக்காக அவர் எந்த ரிஸ்க்கும் எடுக்க மாட்டார். உடல் எடையை கூட குறைக்க மாட்டார். மேக்கப் விஷயத்திலும் அதிக ஈடுபாடு காட்ட மாட்டார் என்பதுதான் அவரது கண்டிசனாக இருக்கிறது.

இப்படி வடதுருவமாக ஹீரோவும், தென் துருவமாக டைரக்டரும் இணையும் இந்த புதிய படம், எந்த மாதிரியான சூழலில் உருவாக போகிறது, ஹீரோவுக்காக டைரக்டர் இறங்கி வருவாரா, அல்லது டைரக்டருக்காக ஹீரோ விட்டுத் தருவாரா என்ற கேள்விகள் இப்போதே எழ ஆரம்பித்து விட்டன. ஆனால் படம் நல்ல முறையில் வெளிவந்தால் அது அஜீத்குமார் திரை பயணத்தில், பெயர் சொல்லும் முக்கிய படமாக தான் இருக்கும். ஏனெனில் வெற்றிமாறன், 100 சதவீதம் சிறந்த படைப்பாளியாக அந்த படத்தை வெற்றிக்கரமாக இயக்கி தருவார் என்பதிலும் சந்தேகமில்லை.

- Advertisement -

சற்று முன்