ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், சுனில், யோகி பாபு, வசந்த் ரவி, சரவணன் உட்பட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

“ஜெயிலர்” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. ரஜினிகாந்த் இதற்கு முன் நடித்த “அண்ணாத்த” திரைப்படம் சரியாக போகவில்லை என்பதால் “ஜெயிலர்” திரைப்படத்தில் நிச்சயமாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் ரஜினிகாந்த் இருக்கிறார். அதே போல் நெல்சன் இதற்கு முன்பு இயக்கிய “பீஸ்ட்” திரைப்படமும் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதால் இருவருக்குமே “ஜெயிலர்” திரைப்படம் முக்கியமான திரைப்படமாக இருக்கிறது.
“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் “லால் சலாம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். இந்த கதாப்பாத்திரத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் தற்போது “லால் சலாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு காட்சி இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

அந்த வீடியோவில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்தில் வெள்ளை நிற ஜிப்பா உடையுடன் தென்படுகிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“லால் சலாம்” திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க, லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள். கிரிக்கெட்டை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#MoideenBhai from #LalSalaam 🔥🔥🔥#Jailer | #Rajinikanth | #Rajinikanth𓃵 | #SuperstarRajinikanth | #superstar @rajinikanth | #Thalaivar | #Thalaivar171 | #MuthuvelPandian | @RIAZtheboss | #superstarSupremacy | #Pondicherry pic.twitter.com/hqEXA4bHen
— Suresh Balaji (@surbalu) June 13, 2023





