- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டார் டைட்டில் சர்ச்சை பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளர்; ரஜினி என்ன செய்தார் தெரியுமா?...

சூப்பர் ஸ்டார் டைட்டில் சர்ச்சை பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளர்; ரஜினி என்ன செய்தார் தெரியுமா?…

- Advertisement -

இந்தாண்டு தொடங்கியது முதல் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயிலர் திரைப்படம், நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ரஜினி திரைப்படம் வெளியாவதால் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டுள்ளன.

படம் மீதான எதிர்பார்ப்பு அதன் முன்பதிவிலேயே நன்றாக தெரிவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டரை லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. ஒட்டு மொத்தமாக முன்பதிவில் மட்டும் 26 கோடியே 31 லட்சம் ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

நெல்சன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஜராப், சுனில், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விநாயகம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் ஏற்கனவே காவாலையா, டைகர் கா ஹுக்கும் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தன. மேலும் படத்தின் ட்ரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கே உண்டான டார்க் காமெடி ரகத்தில் படம் உருவாக்கப் பட்டிருந்தாலும், ரஜினிக்கே உண்டான ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது ட்ரைலரில் நன்றாக தெரிவதாக ரசிகர்கள் கூறினர்.

- Advertisement -

மேலும் ரஜினியின் பஞ்ச் வசனங்களும் வேறு லெவலில் இருப்பதாக ரசிகர்கள் லைக்களை தெறிக்க விட்டனர். சமீபத்தில் முழு படத்தையும் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், இயக்குனர் நெல்சனை அவர் பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாளை படம் வெளியாகும் நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டுள்ளார். அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு செல்வதாகவும், ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு கூறுங்கள் என்றும் தெரிவித்தார். அப்போது சூப்பர் ஸ்டார் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ரஜினிகாந்த் பதில் ஏதும் கூறாமல் காரில் புறப்பட்டு சென்றார்.

- Advertisement -

சற்று முன்