- Advertisement -
Homeபொழுதுபோக்குடிராகன் பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் - கனவு நிறைவேறிய நாள்...

டிராகன் பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் – கனவு நிறைவேறிய நாள் என்று புளகாங்கிதம் அடைந்த அஸ்வத் மாரிமுத்து!

- Advertisement -

ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் டிராகன். லவ் டுடே நாயகன் பிரதீப் ரங்கநான் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, ரூ. 100 கோடி வசூலை கடந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் கல்லூரி கதைக் களத்தில் பல படங்கள் இதுவரை வந்திருந்தாலும் கல்லூரியில் இருந்து வெளியேறிய பிறகு, ஒரு இளைஞன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் வேலை வாய்ப்பு, திருமணம், பெற்றோர் சந்தோஷம் போன்ற பல விஷயங்களை அடுத்தடுத்து சுவாரசியமாகவும் அதே நேரத்தில் யதார்த்தமாகவும் சொன்ன படமாக டிராகன் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக நல்ல கதைகளை கொண்ட வெற்றிப் படங்களை தரும் இயக்குனர்களை, அந்த படத்தில் நடித்த நடிகர்களை, படக்குழுவை நேரில் வீட்டுக்கு அழைத்து பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும் சில படங்களை பார்த்துவிட்டு அதுகுறித்து விமர்சித்து பாராட்டி கடிதமும் எழுதுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மாஸ் ஹிட் படத்தை கொடுத்துள்ள டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவை, நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு நேரில் வரவழைத்து அவரை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தை நேரில் சந்தித்ததை, அவர் பாராட்டியதை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சந்தோஷமாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறியிருப்பதாவது, என்ன ஒரு அட்டகாசமான எழுத்து அஸ்வத், அருமை அருமை அற்புதமா எழுதியிருக்கீங்க என்று ரஜினி சார் என்னை பாராட்டினார். நல்ல படம் பண்ண வேண்டும். படத்தை பார்த்துவிட்டு ரஜினி சார் நம்மை வீட்டுக்கு கூப்பிட்டு பேசணும்.

இதெல்லாம் இயக்குனர் ஆகணும்ங்கற உழைக்கிற பல உதவி இயக்குனர்களோட கனவாக உள்ளது. கனவு நிறைவேறிய நாள் இன்று என்று அந்த பதிவில் நெகிழ்ச்சியாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பதிவு செய்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டிராகன் படம் 10 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடி வசூலித்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்