- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்போதிலிருந்து நீங்கள்தான் எனக்கு முன்னோடி... பிரபல நடிகரை மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார்...

இப்போதிலிருந்து நீங்கள்தான் எனக்கு முன்னோடி… பிரபல நடிகரை மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார்…

- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது, தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஆரம்பத்தில் நகைச்சுவை பாணியிலான கதைகளுக்கு மட்டும் அவர் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அதுவும் அவருக்கு சரியாக கிளிக் ஆனது. இதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது ஹீரோ இமேஜை ஏற்றினார் சிவகார்த்திகேயன்.

தனது கலகலப்பான நடிப்பை சற்று ஓரம் கழற்றி வைத்துவிட்டு, ஆக்சன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். இடையிடையே படங்களிலும் அவர் நடித்து வந்தார். ஆனால் இந்த பாணி அவருக்குப் பெரும்பாலும் தோல்வியையே கொடுத்தது. கடைசியாக அவர் அப்படி நடித்த பிரின்ஸ் திரைப்படம், வந்த சுவடே தெரியாமல் ஓடிப் போனது.

- Advertisement -

இதன் பிறகு சோதனை முயற்சியாக, சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் மாவீரன். தமிழ் சினிமாவில் வழக்கமான சூப்பர் ஹீரோ கதை என்றாலும், அதை காட்சிப்படுத்திய விதம் மிக மிக புதுமையாக இருந்ததாலேயே இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. எதற்கெடுத்தாலும் பயப்படும் ஹீரோ, அவனுக்கு மட்டும் கேட்கும் ஒரு குரல் என முடிந்த அளவு சுவாரசியமாக கதை கூற முயற்சி செய்தார் இயக்குனர் மடோனா அஸ்வின்.

சிவகார்த்திகேயன் முந்தைய திரைப்படங்களான டாக்டர், டான் போன்ற மிகப் பெரிய வெற்றியை இந்த திரைப்படங்கள் பெறவில்லை என்றாலும், முதலுக்கு மோசம் இல்லாமல் அவருக்கு லாபத்தையே பெற்று கொடுத்தது. இந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கும் திரைப்படம் தான் அயலான். 2018 ஆம் ஆண்டு இதற்கான சூட்டிங் பணிகள் தொடங்கப்பட்டன. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற, ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியால் முடங்கிப் போனது அயலான் திரைப்படம்.

- Advertisement -

ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஏலியனை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து பொங்கல் பண்டிகைக்கு அயலான் ரிலீஸ் செய்யப்பட்டது. எதிர்பார்த்த விமர்சனத்தை இந்த திரைப்படம் பெறவில்லை என்றாலும், திரையரங்குகளில் கூட்டம் மட்டும் குறையாத காரணத்தால் கல்லா கட்டியது அயலான். இதுவரை 75 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் இனிமேல்தான் ரீமேக் செய்யப்படுகிறது.

இப்படியான சூழலில், அயலான் திரைப்படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை வாழ்த்தி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இது குறித்து சிவகார்த்திகேயனே பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, எப்படி இப்படி வித்தியாசமான படங்களில் நடிக்கிறீங்க. மக்களுக்கு புதுப்புது விஷயங்களை கொடுக்க வேண்டும் என்று சொல்ற உங்களுடைய எண்ணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எப்போதிலிருந்து நீங்கள் எனக்கு முன்னோடி என்று தெரிவித்தார். அறிவியல் பூர்வமாக எடுக்கப்பட்ட எந்திரம் திரைப்படம் தான் சார், அயலான் எடுக்க எனக்கு உத்வேகமாக இருந்தது எனத் தெரிவித்தேன் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்