- Advertisement -
Homeபொழுதுபோக்குஉனக்கு எங்கேயோ மச்சம் இருக்குயா.. என்னை பாரதிராஜா தலைவர்னுதான் கூப்பிடுவாரு - ரஜினிகாந்த் ஷேரிங்ஸ்

உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குயா.. என்னை பாரதிராஜா தலைவர்னுதான் கூப்பிடுவாரு – ரஜினிகாந்த் ஷேரிங்ஸ்

- Advertisement -

இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த். பெங்களூரில் நடத்துநராக இருந்து நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சினிமா கல்லூரியில் இணைந்து பிறகு நடிக்க வந்தது அனைவருமே அறிந்ததுதான். சினிமாவுக்குள் அவர் அடியெடுத்து வைத்தபோது அவருக்கு விமர்சன அடிகள் கொஞ்சம் அதிகமாகவே விழுந்தன. கறுப்பாக இருக்கிறார், கண்கள் சிறியதாக இருக்கின்றன, தமிழ் உச்சரிப்பு வரவில்லை என ஏகப்பட்ட குறைகள் சொன்னார்கள்.

ஆனால் அந்தக் குறைகள் அனைத்தையும் கண்டுகொள்ளாமல் தனக்கென தனித்துவமான ஸ்டைலை உருவாக்கிக்கொண்டார். அதனையடுத்து அவர் நடித்த படங்கள் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் அவருக்கு வந்தது. ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயரையும் ரஜினிகாந்த் பெற்றார். அவர் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். ஆகஸ்ட் பத்தாம் தேதி படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்துக்காக அவர் நூறு கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இப்போது கோடிகளில் புரளும் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் சில ஆயிரங்களுக்கே திண்டாடியவர். அவரது கரியரில் முக்கியமான படமாக அமைந்தது பதினாறு வயதினிலே. பாரதிராஜாவின் முதல் படமான அதில் கமல் ஹாசன் ஹீரோ. ரஜினிகாந்த் பரட்டை என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். இது எப்டி இருக்கும் என அவர் படத்தில் ஸ்டைலாக சொல்லும் முறை அனைவருக்கும் பிடித்துபோனது. ரஜினிக்கு அடையாளத்தையும் பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தில் நடித்தபோது ரஜினிக்கு சில ஆயிரங்கள் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு விழாவில் தனக்கும் பாரதிராஜாவுக்கும் இருக்கும் நட்பு குறித்து மனம் திறந்து பேசியிருந்தது தற்போது ட்ரெண்டாகியுள்ளது. அந்த விழாவில் பேசிய அவர், “பாரதிராஜா என்னை தலைவருனுதான் கூப்பிடுவாரு. ரசிகர்கள் என் மேல் வைத்திருக்கும் அபிமானத்தால் கூப்பிடும் தலைவர் இல்லை இது. இது வேறு மாதிரியான; இந்த தலைவருக்கென்று தனி டோன் இருக்கிறது. இன்னொன்றும் அவர் என்னிடம் சொல்வார்; அதாவது எனது படங்கள் நண்றாக ஓடிக்கொண்டிருக்கும்போதெல்லாம் எனக்கு ஃபோன் செய்து உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குயா என்பார் என அந்த விழாவில் ரஜினி பேசினார்.

- Advertisement -

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்துக்கு பிறகு ஞானவேல் இயகக்த்தில் ஒரு படத்திலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இதற்கிடையே தனது மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் அவர் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கேமியோ ரோல் செய்திருக்கிறார். அந்தப் படமும் விரைவில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்