சிரிப்பழகி என்று புகழ் பெற்ற லைலா, ஒரு காலகட்டத்தில் 90ஸ் கிட்ஸ்களின் தூக்கத்தை கெடுத்த நடிகராக வலம் வந்தவர். தொடக்கத்தில் மாடலிங் துறையில் இருந்த லைலா, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிக்கத் தொடங்கிய லைலா, தமிழ் சினிமாவின் பிசியான நடிகையாக வலம் வந்தார்.
“பார்த்தேன் ரசித்தேன்”, “தினா”, “தில்”, “நந்தா”, “பிதாமகன்” போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்த லைலா, 2006 ஆம் ஆண்டு அஜித்தின் “திருப்பதி” திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோல் செய்திருந்தார். அதன் பின் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதால் நடிப்பில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.
அதன் பில் பல வருடங்கள் கழித்து, கார்த்தியின் “சர்தார்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் “வதந்தி” என்ற வெப் சீரீஸிலும் நடித்தார். தற்போது “சப்தம்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், லைலாவை குறித்து ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டார்.
அதாவது அதுவரை தமிழ் திரைப்படத்தில் நடிக்காத லைலாவுக்கு தமிழில் முதல் திரைப்படத்திற்கான வாய்ப்பு வருகிறது. அத்திரைப்படம் ஒரு கிராமத்து சப்ஜெக்ட். அதில் விஜயகாந்த் ஹீரோவாக ஒப்பந்தமானார்.
விஜயகாந்தை பார்த்த லைலா, இவருடன் எப்படி ஜோடியாக நடிக்க என்று தயங்கினாராம். அதன் பின் தமிழ்நாட்டில் விஜயகாந்திற்கு இருக்கும் செல்வாக்கையும் புகழையும் புரிந்துகொண்டாராம் லைலா. அதன் பிறகுதான் அத்திரைப்படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். அத்திரைப்படத்தின் பெயர்தான் “கள்ளழகர்”.





